ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நாடு முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச அதிவேக Wifi சேவை

நாடு முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச அதிவேக Wifi சேவை

வைஃபை

வைஃபை

Indian Railways - Free Wi-Fi service | ரயில்வே ஸ்டேஷன்களில் இலவசமாக அதிவேக வைஃபை நெட் வசதியை வழங்கும் திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாடு முழுவதும் உள்ள 8500-க்கும் அதிகமான ரயில் நிலையங்களில் ஃப்ரீயாக வைஃபை வசதியை வழங்கும் முயற்சியில் இந்திய ரயில்வே துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ரயில்வே ஸ்டேஷன்களில் இலவசமாக அதிவேக வைஃபை நெட் வசதியை வழங்கும் திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

பல கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை புறநகர்பகுதி மற்றும் கிராம பகுதிகளில் உள்ள ரயில்வே நிலையங்கள் உட்பட நாட்டில் உள்ள சுமார் 6,105 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வைஃபை சேவையை வழங்கப்பட்டு வருவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் ஷேர் செய்துள்ள அமைச்சகம், 'டிஜிட்டல் இந்தியா முயற்சியை வலுப்படுத்துதல்! பயணிகளின் வசதிக்காக இந்திய இரயில்வே நெட்வொர்க்கில் உள்ள 6,105 ரயில் நிலையங்களில் தற்போது இலவச அதிவேக வைஃபை சேவை கிடைக்கிறது' என்று கேப்ஷன் கொடுத்து உள்ளது.

இதனிடையே இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ரயில்வே அதிகாரிகள் இப்போது இலவச அதிவேக வைஃபை சேவை கிடைக்கும் சுமார் 6,105 ரயில் நிலையங்களில், 5,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் கிராமப்புறங்களில் உள்ளதாகவும், வடகிழக்கு பிராந்தியத்தின் பல ரயில் நிலையங்கள் மற்றும் காஷ்மீரின்15 ரயில் நிலையங்கள் என நாடு முழுவதும் உள்ள பல தொலைதூர ரயில் நிலையங்களில் இந்த இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படுகின்றன என்றும் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Also Read : இனி வெயிட்டிங் லிஸ்ட் தொல்லை இல்லை; ஐஆர்டிசியின் அதிரடி திட்டம்!

இந்தியன் ரயில்வே, ரயில்வே அமைச்சகம் மற்றும் அரசுக்கு சொந்தமான பிராட்பேண்ட் மற்றும் விபிஎன் சேவைகளை வழங்கும் ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிட்டெட் தான் தற்போது ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச வைஃபை இண்டர்நெட்டை வழங்குகிறது.

இதனிடையே RailTel-ஆனது அதன் ரீடெயில் பிராட்பேண்ட் RailWire-ன் வாடிக்கையாளர்கள் இப்போது நாடு முழுவதும் உள்ள 6,105 ரயில் நிலையங்களில் RailTel-ன் அதிவேக Wi-Fi நெட்வொர்க்கில் தங்கள் ஹோம் பிராட்பேண்ட் பிளான்களை பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.! 

ரயில் நிலையங்களில் RailWire வாடிக்கையாளர்கள் எப்படி ஹோம் பிராட்பேண்ட் பிளான்களை பயன்படுத்துவது?

ரயில் நிலையங்களில் RailWire பயன்படுத்த RailWire வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் Wi-Fi-ஐ ஆன் செய்த பிறகு, RailWire SSID-ஐ தேர்ந்தெடுத்து, RailWire யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை என்டர் செய்வதற்கு லாகின் ஸ்கிரீனில் வழங்கப்பட்டுள்ள ஹைப்பர்லிங்கைக் கிளிக் செய்யவும். தற்போது RailWire நாடு முழுவதும் சுமார் 4.82 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Digital India, Indian Railways, Railway Station, Wifi