Home /News /automobile /

துபாய் செல்லும் பயணிகள் இனி இந்திய விமான நிலையங்களில் Rapid RT-PCR டெஸ்ட் செய்ய தேவையில்லை!

துபாய் செல்லும் பயணிகள் இனி இந்திய விமான நிலையங்களில் Rapid RT-PCR டெஸ்ட் செய்ய தேவையில்லை!

இந்திய விமான நிலையங்களில் Rapid RT-PCR டெஸ்ட் செய்ய தேவையில்லை

இந்திய விமான நிலையங்களில் Rapid RT-PCR டெஸ்ட் செய்ய தேவையில்லை

அமீரகம் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்படும் கோவிட் சோதனை முடிவு எதிர்மறையாக இருக்க வேண்டும் என்ற முந்தைய விதி இன்னும் உள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் பயண அனுபவத்தை எளிதாக்க துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (DCAA), ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பு, சம்பந்தப்பட்ட விமான நிலையங்களில் ரேபிட் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு (Rapid RT-PCR test) உட்பட வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. மேலும் இது உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. DCAA-வின் இந்த நடவடிக்கை இந்தியாவிலிருந்து துபாய்க்கு பறக்கும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியாக இருக்கிறது.

எனினும் அமீரகம் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்படும் கோவிட் சோதனை முடிவு எதிர்மறையாக இருக்க வேண்டும் என்ற முந்தைய விதி இன்னும் உள்ளது. இதனால் இப்போது, QR குறியீட்டை உருவாக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்திலிருந்து கோவிட்-19 தொற்றுக்கான செல்லுபடியாகும் நெகட்டிவ் RT-PCR டெஸ்ட் சர்டிபிகேட்டை மட்டுமே பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும். DCAA-வின் இந்த உத்தரவு தற்போது துபாய் விமான நிலையத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபி மற்றும் ஷார்ஜா விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடமிருந்து இதுபோன்ற எந்தத் தகவல்களும் தங்களுக்கு வரவில்லை என்று ஏர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

துபாயை பொறுத்த வரை பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதன்மையான நாடு என்பதால், இந்த இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வது முக்கியமாக இருக்கிறது. துபாய் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் அதிக பயணிகள் எண்ணிக்கையை பெற்று உள்ளன.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளுக்கு தேவைப்படுபவை:

புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட RT-PCR சோதனையின் நெகட்டிவ் ரிப்போர்ட் அவசியம். கோல்டன் மற்றும் சில்வர் விசாவை தவிர அனைத்து வகையான விசா வைத்திருப்பவர்களுக்கும் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஃபெடரல் ஆணையம் அல்லது குடியுரிமை மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம்-துபாய் உள்ளிட்ட அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். மேலும் துபாய்க்கு சென்றவுடன் RT-PCR சோதனை செய்து கொண்டு, நெகட்டிவ் ரிசல்ட் வரும் வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். துபாய் சென்றவுடன் ஒரு பயணிக்கு சோதனை முடிவு பாசிட்டிவ் என்று வந்தால் துபாய் எமிரேட்டில் உள்ள தொடர்புடைய சுகாதார ஆணையம் வழங்கி இருக்கும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

Also read... இண்டிகோவின் புதிய ஆஃபர்: ஆப் வழியாக முன்பதிவு செய்தால் ஃப்ரீ மீல் மற்றும் சீட் செலெக்ஷன்!

துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் முந்தைய நிபந்தனை விலக்கி கொள்ளப்பட்டு உள்ளகள் துபாய் செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர். மேலும் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் துபாய் மற்றும் இந்தியா இடையே பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பது உறுதி என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Flight travel

அடுத்த செய்தி