BS 6 எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிய நாட்டின் முதல் எண்ணெய் நிறுவனம்!

இந்த BS-VI எரிபொருளில் மாசுபாட்டை ஏற்படுத்தும் சல்ஃபர் அளவு குறைவாக இருக்குமாம்.

BS 6 எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கிய நாட்டின் முதல் எண்ணெய் நிறுவனம்!
BS-VI
  • Share this:
நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் நாட்டிலேயே முதலாவதாக BS 6 எரிபொருள் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது.

உலகின் தூய்மையான எரிபொருள் ஆக BS 6 எரிபொருள் கருதப்படுகிறது. இந்தியாவில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS-VI ரக வாகனங்களை மட்டும் தான் வாங்க, விற்க வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது.

இத்தகைய சூழலில் BS-VI வாகனங்களை விற்பனையில் இறக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதேபோல், BS-VI ரக எரிபொருள் சேவையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடங்க உள்ளன.


நாட்டின் முதலாவதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது 28 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களிலும் BS-VI பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தைத் தொடங்கியுள்ளது.

இந்நிறுவனத்தைத் தொடர்ந்து இம்மாதத்துக்குள் பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களும் BS-VI எரிபொருள் விநியோகத்துக்குத் தயாராகி வருகின்றன. இந்த BS-VI எரிபொருளில் மாசுபாட்டை ஏற்படுத்தும் சல்ஃபர் அளவு குறைவாக இருக்குமாம்.


இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




 மேலும் பார்க்க: ஒரு BS 4 பைக் கூட மிச்சமில்லாமல் விற்றுவிட்டோம்- கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading