Home /News /automobile /

உலகின் மிகப்பெரிய டெண்டர்... ரூ.80,000 கோடியில் இ-பஸ்களை வாங்க மத்திய அரசு திட்டம்

உலகின் மிகப்பெரிய டெண்டர்... ரூ.80,000 கோடியில் இ-பஸ்களை வாங்க மத்திய அரசு திட்டம்

 எலெக்ட்ரிக் பேருந்து

எலெக்ட்ரிக் பேருந்து

Electric Bus | மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் வாகன போர்ட்டலின் படி, நாட்டில் 13 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கன்வர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL - Convergence Energy Services Ltd.) 50,000 எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்க தயாராகி வருகிறது. எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவதற்கான இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூ.80,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ-பஸ்கள் வாங்குவதற்கான உலகின் மிகப்பெரிய டெண்டராக இது இருக்கும். பொது போக்குவரத்தை சுற்றுப்புறசூழலை காக்கும் மாசு இல்லாததாக மாற்ற மத்திய அரசு எடுத்துள்ள பெரிய நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.

  மேலும் இந்த நடவடிக்கை நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான (net zero emissions) அரசின் இலக்குகளை அடைய உதவும். வரும் 2070-ஆம் ஆண்டிற்குள் பூஜ்ஜிய மாசு உமிழ்வை (Zero pollution emission)அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய கொள்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 50,000 எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவதற்கான டெண்டரை CESL  (CESL - Convergence Energy Services Ltd.) விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  விரைவில் வெளியாக உள்ள டெண்டர் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்குவதில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என CESL கூறுகிறது. இந்த நடவடிக்கை இந்தியாவில் எலெக்ட்ரிக் வெஹிகிள் தொழிலுக்கு ஊக்கமளிக்கும் என்றும் அடுத்த 5-6 ஆண்டுகளில் நாட்டின் பெரிய நகரங்களில் உள்ள அனைத்து பேருந்துகளும் மின்சாரத்தில் இயங்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். CESL-ன் நிர்வாக இயக்குநர் மஹுவா ஆச்சார்யா கூறுகையில், இத்தகைய டெண்டர்கள் உள்கட்டமைப்பு திட்டங்களாக தோற்றமளிக்கத் தொடங்கியுள்ளன. எலெக்ட்ரிக் பேருந்துகளின் உள்ளூர் உற்பத்தி தேவைக்கு ஏற்ப வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  ALSO READ | வீட்டு நாயை குளிக்க வைக்க மறுத்த கன்மேனை சஸ்பெண்ட் செய்த எஸ்.பி.. அதிரடி காட்டிய ஐ.ஜி!

  எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு தொடர்பான தனது இலக்கை நோக்கி இந்தியா மிக மிக வேகமாக முன்னேறி வருகிறது. 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் பொது பேருந்துகளை மின்மயமாக்க முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் CESL 5 மாநில அரசுகள் சார்பாக 5,450 மின்சார பேருந்துகளுக்கான ஒப்பந்தத்தை வழங்கியது என்றார். டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, சூரத் மற்றும் ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்துப் பொதுப் பேருந்துகளையும் முழுவதுமாக எலெக்ட்ரிக்காக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

  இந்த நகரங்களில் சுமார் 5,450 இ-பஸ்களை இயக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் சுமார் 25 மாநிலங்களில் 50,000 எலெக்ட்ரிக் பேருந்துகளை புழக்கத்தில் விட CESL திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கேற்ப 25 மாநிலங்களில் சுமார் 30,000 பழைய பேருந்துகளை அகற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

  ALSO READ |  'ஷீரடி சாய்பாபாவிற்கு வைரம் பதித்த தங்க கிரீடம்' 80 வயதில் ஆசையை நிறைவேற்றிய மருத்துவர் !

  மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் வாகன போர்ட்டலின் படி, நாட்டில் 13 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2,500-க்கும் மேற்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன்கள் நாட்டின் பல மாநிலங்களில் செயல்படுகின்றன. நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில் மொத்த எலெக்ட்ரிக் வாகன விற்பனை 1,34,821 யூனிட்களாக இருந்தது. அதுவே 2021-22 நிதியாண்டில், 4,29,217 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Central government

  அடுத்த செய்தி