ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

பின் இருக்கை பெல்ட் அலாரத்தை கட்டாயமாக்குவதற்கான வரைவு விதிகளை வெளியிட்ட சாலை போக்குவரத்து அமைச்சகம்!

பின் இருக்கை பெல்ட் அலாரத்தை கட்டாயமாக்குவதற்கான வரைவு விதிகளை வெளியிட்ட சாலை போக்குவரத்து அமைச்சகம்!

மாதிரி படம்

மாதிரி படம்

M1 வகை வாகனங்களில் சைல்டு சேஃப்டி லாக் அனுமதிக்கப்படாது. பயணிகள் சீட் பெல்ட் இல்லாமல்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சாலை விபத்து உயிரிழப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கார்களின் முன்புற சீட்களுக்கு இருப்பது போல் பின்புற சீட் பெல்ட்டுகளுக்கும் (rear seat belt) அலாரம் சிஸ்டம் நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான வரைவு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

  மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரைவு விதிகள் குறித்த பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்க அக்டோபர் 5-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் கார் விபத்தில் இறந்த நிலையில், மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

  சில நாட்களுக்கு முன்னதாக பேசி இருந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன உற்பத்தியாளர்கள் பின் இருக்கைகளுக்கும் சீட் பெல்ட் அலாரம் சிஸ்டமை அறிமுகப்படுத்துவது கட்டாயமாக்கபடும் என தெரிவித்திருந்தார்.

  உலகின் நான்காவது பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில் காரில் பயணிப்பவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதே போல தற்போதுள்ள விதிகளின்படி அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் முன் இருக்கை பயணிகளுக்கு மட்டும் சீட் பெல்ட் ரிமைன்டர்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

  மத்திய மோட்டார் வாகன விதிகளின் (CMVR) விதி 138 (3)ன் கீழ், பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த கட்டாய விதி பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

  இதனிடையே சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள வரைவு விதிகளில், எம் மற்றும் என் வகை வாகனங்களில் சீட் பெல்ட் அலாரங்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும், மேலும் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் வாகனங்களில் ஆடியோ-வீடியோ எச்சரிக்கை இருக்க வேண்டும். தவிர, ஓவர் ஸ்பீடு அலாரம் கட்டாயமாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

  M1 வகை வாகனங்களில் சைல்டு சேஃப்டி லாக் அனுமதிக்கப்படாது. பயணிகள் சீட் பெல்ட் இல்லாமல் இருந்தால், ரைடர்களை எச்சரிக்க 2-லெவல் அலாரம் சிஸ்டம் நிறுவப்படும். இதில் முதல் நிலை எச்சரிக்கை என்பது ignition switch செயல்படும் போது - என்ஜின் இயங்குகிறதா இல்லையா - மற்றும் ஓட்டுநர் மற்றும் / அல்லது பின் இருக்கை பயணிகளின் பாதுகாப்பு பெல்ட் இணைக்கப்படாதபோது விஷுவல் வார்னிங் ஆக்டிவேட் செய்யப்படும்.

  Read More: இந்த போக்குவரத்து குறியீடுகள் மற்றும் அடையாளங்கள் எதற்கு எனத் தெரியுமா?

  இரண்டாம் நிலை எச்சரிக்கை என்பது ஓட்டுநர் அல்லது பின் இருக்கை பயணிகள் பாதுகாப்பு பெல்ட்டை போடாமல் வாகனம் இயக்கப்படும் போது விஷுவல் மற்றும் ஆடியோ எச்சரிக்கை ஆக்டிவேட் செய்யப்படும்.

  புதிய வரைவு திருத்தம் M மற்றும் N வகை வாகனங்களுக்கு பொருந்தும், இதில் பயணிகள் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அடங்கும்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Car, Motor, Road Safety