Home /News /automobile /

இந்தியாவில் அதிகரிக்கும் SUV மோகம் - 5 ஆண்டுகளில் 36 மாடல்கள் அறிமுகம்!

இந்தியாவில் அதிகரிக்கும் SUV மோகம் - 5 ஆண்டுகளில் 36 மாடல்கள் அறிமுகம்!

SUV கார்

SUV கார்

எஸ்யூவிக்கள் மீதான இந்தியாவின் காதல் மிகவும் தீவிரமடைந்து வருகிறது.

    SUV கார்கள் மீதான இந்தியர்களின் மோகம் வேகமாக அதிகரித்து வருகிறது, மேலும் வாகன உற்பத்தியாளர்கள் இந்த மோகத்தை மேலும் தூண்டி வருகின்றனர், அந்த வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 36 மாடல் SUV கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    ஹேட்ச்பேக்குகள்(hatchbacks) விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கார் சந்தையில் இப்போது ஆரம்ப நிலை மற்றும் நடுத்தர அளவிலான விளையாட்டு பயன்பாட்டு வாகனங்கள் (SUV -sports utility vehicles) பிரபலமடைந்து வருகின்றன, இது இந்த வகை வாகனங்களில் புதிய தயாரிப்புகள் வெளியாக வழிவகுக்கிறது.

    எஸ்யூவிக்கள் மீதான இந்தியாவின் காதல் மிகவும் தீவிரமடைந்து வருகிறது, மேலும் வாகன உற்பத்தியாளர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற 36 மாடல்களை அறிமுகப்படுத்தி இந்த காதலை மேலும் அதிகப்படுத்தி வருகின்றனர். இது எந்த அளவுக்கு என்றால், மிகவும் பிரபலமான சில மாடல்களுக்கான காத்திருப்பு காலம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது, மேலும் புதிய ஆர்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

    கார் வாங்குபவர்கள் இப்போது தங்கள் தனிப்பட்ட பயணத்தில் அதிக செலவு செய்யத் தயாராக உள்ளனர், மேலும் சன்ரூஃப் மற்றும் இணைக்கப்பட்ட தொழில்நுட்பங்கள்(connected technologies) போன்ற அம்சங்களைக் கொண்ட டாப்-எண்ட் வகைகளையே அவர்கள் விரும்புகிறார்கள்.

    "கடந்த சில ஆண்டுகளில் SUV பிரிவு பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. தொழில்துறையில் 19 சதவீதமாக இருந்த SUV பிரிவின் பங்களிப்பு, 2021-22ல் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது, அது மேலும் வளர்ச்சியடைவதை நாங்கள் காண்கிறோம்" என Maruti Suzuki India மூத்த நிர்வாக இயக்குனர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா பிடிஐயிடம் தெரிவித்தார்.

    ALSO READ | உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை... எலெக்ட்ரிக் வாகனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் தெரியுமா.?

    இந்த பிரிவின் வளர்ச்சிக்கான காரணங்களில் ஒன்று, உயர்ந்த நிலைப்பாடு (high stance road visibility)மற்றும் சாலைத் தெரிவுநிலையுடன்( road visibility) கூடிய வாகனங்களை வாடிக்கையாளர்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

    கடந்த ஆண்டு உற்பத்தியான 30.68 லட்சம் வாகனங்களில், நுழைவு நிலை (entry-level )எஸ்யூவிகளின் பங்கு 6.52 லட்சம் மட்டுமே. கடந்த ஐந்து ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான SUV வாகன உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமல்ல.

    "மேலும், புதிய மில்லினியல்கள் பல வசதிகளுடன் கூடிய உயர்தர கார் வகைகளை வாங்க விரும்புகின்றனர். Future car எனப்படும் இந்த வகை கார்களுக்கான விருப்பம் 2016-17ல் 17 சதவீதத்திலிருந்து 2021-22ல் 24 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட ப்ரீஸா போன்ற மாடல்களின், 70 சதவீத முன்பதிவுகளில் முதன்மையான மாறுபாடுகள் உள்ளன" என்று ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டார்.

    மக்கள் அதிகமாகச் செலவழிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன. மாறுபட்ட வடிவமைப்பு, வளர்ச்சியடைந்து வரும் வாழ்க்கை முறை, தொற்றுநோய்களின் விளைவாக பொதுப் போக்குவரத்தில் இருந்து தனிப்பட்ட போக்குவரத்திற்கு மாறுதல், பாதுகாப்பு மற்றும் வசதி அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது ஆகியவை பயணிகள் வாகன சந்தையின் வளர்ச்சியை உந்தும் சில காரணிகள் என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா கூறினார்.

    ALSO READ | நிசான் மேக்னைட் ரெட் எடிஷன் SUV இந்தியாவில் அறிமுகம் - விலை உள்ளிட்ட முழுமையான விவரங்கள்!
     

    "இன்று வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்புவதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள், மேலும் எங்கள் வரம்பில் அதையே அவர்களுக்கு வழங்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம், இது குறுகிய இடைவெளியில் அம்சங்கள், மாறுபாடுகள் அல்லது புத்தம் புதிய தயாரிப்புகளின் அடிப்படையில், புதுப்பிக்கப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    கியா இந்தியாவின் தலைமை விற்பனை அதிகாரி மியுங்-சிக் சோன் கூறுகையில், இந்திய வாடிக்கையாளர்களிடையே SUV களுக்கான தேவை அதிகரித்து வருவது, ஸ்டைலான வாகனங்களுக்கான வலுவான விருப்பத்தை தெளிவாகக் காட்டுகிறது என்றார். "நாங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Carens-ஐ அறிமுகப்படுத்தினோம், ஏற்கனவே ஐந்து மாதங்களுக்குள் 30,000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்துள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.

    ALSO READ | இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.! 
     இணைக்கப்பட்ட அம்சங்கள் இன்று வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களில் விரும்பும் ஒன்று மற்றும் கியா(KIA) இப்போது இந்திய சாலைகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான இணைக்கப்பட்ட கார்களை 97 சதவிகிதம் செயல்படுத்தும் விகிதத்துடன் கொண்டுள்ளதாகவும் சோன் கூறினார். டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் அசோசியேட் துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், புதிய அறிமுகங்கள் மற்றும் தயாரிப்பு புதுப்பிப்புகள் எப்போதும் வாடிக்கையாளர்களிடையே உற்சாகத்தையும் கூடுதல் ஆர்வத்தையும் தருவதாக குறிப்பிட்டார். "டொயோட்டாவில் நாங்கள் புதிய கேம்ரி ஹைப்ரிட் மற்றும் புதிய க்ளான்ஸா உட்பட அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து புதிய சலுகைகளுக்கும் அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளோம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Suv car

    அடுத்த செய்தி