ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

நாட்டின் எதிர்காலம் கலப்பு எரிபொருள் தான்.. - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேச்சு.!

நாட்டின் எதிர்காலம் கலப்பு எரிபொருள் தான்.. - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேச்சு.!

ஃப்ளெக்ஸி-ஃப்யூயல் கார்

ஃப்ளெக்ஸி-ஃப்யூயல் கார்

Flexi-Fuel Vehicle | இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி மற்றும் தன்னிறைவு, காற்று மாசுபாட்டைக் குறைத்தல், தூய்மையான ஆற்றல் மாற்றத்தை நோக்கி உலகை இந்தியா வழிநடத்துகிறது என்றார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் மின்சாரத்திற்குப் பிறகு இப்போது மத்திய அரசு ஃப்ளெக்ஸி-ஃப்யூயலில் கவனம் செலுத்துகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையானது ஃப்ளெக்ஸி ஃப்யூயல் வாகனங்களை வெவ்வேறு விலைகளில் விரைவில் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIAM) ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில்  பேசிய மத்திய அமைச்சர், ஃப்ளெக்ஸி-ஃப்யூயல் வாகனங்களை மார்கெட்டிற்கு விரைவாக கொண்டு வருவதன் மூலம் கலப்பு எரிபொருள் தொழில்நுட்பத்தை விரைவில் நாட்டில் ஏற்று கொள்ள முடியும். மேலும் ஃப்ளெக்ஸி ஃப்யூயலுக்கான விற்பனைக்கு சப்ளை, பாலிசி மற்றும் விரிவான ஆதரவை அரசு வழங்கும் என்று ஹர்தீப் சிங் பூரி கூறினார். Flexi Fuel E10-ல் பெட்ரோலுடன் 10% எத்தனால் கலக்கப்படுகிறது மற்றும் E20-ல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படுகிறது.

குறிப்பிட்ட நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றில் பல விலை புள்ளிகளில் ஃப்ளெக்ஸி ஃப்யூயல் வாகனங்களை நாட்டில் விரைவில் கொண்டு வர நான் விரும்புகிறேன். வரும் ஏப்ரல் 2023-க்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட pump-களில் E20 எரிபொருளை கிடைக்கச் செய்வதற்கான முன்னோடித் திட்டத்திற்கு அரசு தயாராக உள்ளது என்பதையும் தனது பேச்சின் போது வெளிப்படுத்தினார் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங். மேலும் திட்டமிட்டுள்ளதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 1000 கோடி லிட்டர் எரிபொருளை உற்பத்தி செய்யும் இலக்கை எட்டுவோம் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.

ரூ.30 ஆயிரம் கோடி சேமிப்பு..

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் e20 எரிபொருளின் உதவியால் வரும் 2025-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அன்னியச் செலாவணியை இந்தியா சேமிக்க முடியும் என்றார். மேலும் 2025-ஆம் ஆண்டுக்குள் எத்தனால் எரிபொருளுக்கான தேவை 10.16 பில்லியன் லிட்டராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹர்தீப் சிங் பூரி கூறினார். எவ்வாறாயினும் நாட்டில் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் எஞ்சின் வாகனங்களின் உற்பத்தியை பெரிய அளவில் உயர்த்த வேண்டிய அவசியம் உள்ளது என்று குறிப்பிட்டார். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மிகவும் வலுவான பொருளாதாரம் என்பதால், ஃப்ளெக்ஸி ஃப்யூயல் மற்றும் E20-இணக்கமான வாகனங்களுக்கான நுகர்வோர் தேவை உத்தரவாதம் அளிக்கப்படும் என்று வாகன உற்பத்தியாளர்களுக்கு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் உறுதியளித்தார். நாட்டின் எதிர்காலம் ஃப்ளெக்ஸி-ஃப்யூயல் என்றும் கூறினார்.

Also Read : ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 - பிரபலமான இந்த டூரிங் பைக்கின் வரலாறு தெரியுமா.?

இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி மற்றும் தன்னிறைவு, காற்று மாசுபாட்டைக் குறைத்தல், தூய்மையான ஆற்றல் மாற்றத்தை நோக்கி உலகை இந்தியா வழிநடத்துகிறது என்றார். இதற்கிடையே பெட்ரோலில் எத்தனால் கலப்பு சதவீதம்கடந்த 2013-ல் 0.67% ஆக இருந்த நிலையில், கடந்த மே 2022-ல் 10% ஆக உயர்ந்துள்ளது. பயோஃப்யூயல்ஸை விற்பனை செய்யும் பெட்ரோல் பம்புகளின் எண்ணிக்கை 2016-17ல் 29,897ல் இருந்து 2021-22ல் 67,641 ஆக மூன்று மடங்கு அதிகரித்துள்ளது, இந்தியாவின் எத்தனால் தேவை 2025ஆம் ஆண்டுக்குள் 10.16 பில்லியன் லிட்டராக உயரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Published by:Selvi M
First published:

Tags: Automobile, India, Tamil News