இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மற்றும் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்கவும், கார்பன் உமிழ்வை முற்றிலுமாக தவிர்க்கவும் மாற்று எரிபொருள் மற்றும் பாரம்பரிய எரிபொருள் பயன்பாட்டுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு கடந்த ஆண்டு முதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, டூவீலர் முதல் சொகுசு கார்கள் வரை பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும், பலவிதமான வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் மாடல்களை வடிவமைத்து உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் வாங்குபவர்கள் வருமான வரிச் சட்டம் 80EEB பிரிவின்படி வருமான வரியிலிருந்து விலக்கும் வழங்கப்படுவதால், எலெக்ட்ரிக் மொபிலிட்டிக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி கார், பைக், ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களுக்கு மட்டுமின்றி அதற்கான உதிரி பாக தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வரவேற்பாக அமைந்துள்ளது. இந்திய வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான “சோனா பிஎல்டபிள்யூ ப்ரிசிஷன் ஃபோர்கிங்ஸ்” நிறுவனம் (Sona BLW Precision Forgings) அதன் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு அடுத்த சில ஆண்டுகளில் எலக்ட்ரிக் வாகன (EV) உதிரிபாகங்களிலிருந்து வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
ஏனெனில் வாகன உற்பத்தியாளர்கள் சுத்தமான மாற்று சக்தி கார்களை உருவாக்க ஆர்வம் காட்டி வருவதால், உதிரி பாகங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாக அதன் தலைவர் சஞ்சய் கபூர் தெரிவித்துள்ளார். மோட்டார்கள் மற்றும் கியர்கள் போன்ற டிரைவ் டிரெய்ன் கூறுகளை உற்பத்தி செய்யும் சோனா பிஎல்டபிள்யூ, அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் $130 மில்லியன் அமெரிக்க டாலர்களை அதன் எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்வதற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கார் தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்வதால், உதிரி பாக தயாரிப்பாளர்களும் பெட்ரோல் வாகனங்களுக்கு தேவையான உதிரி பாக தயாரிப்புகளில் இருந்து விலகி, புதுமையான தொழில்நுட்பங்களை நோக்கி தங்கள் வணிகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சஞ்சய் கபூர் கூறுகையில், "எங்கள் புதிய முதலீடுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகன உதிரி பாகங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும். அடுத்த சில ஆண்டுகளில் சோனாவின் ஆர்டர் புத்தகத்தின் பெரும்பகுதி 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான எலெக்ட்ரிக் வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்வது ஆகும்.
சோனா பிஎல்டபிள்யூ 2015ல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உதிரி பாக தயாரிப்பில் முதலீடு செய்யத் தொடங்கியது மற்றும் அதனை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள கார் தயாரிப்பாளர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இது மின்சார மோட்டார்களை உருவாக்க உலகளாவிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது மற்றும் பற்றாக்குறையாக இருக்கும் முக்கிய மூலப்பொருட்களை சார்ந்திருப்பதை குறைக்க காந்தம் இல்லாத மோட்டார்களை உருவாக்க இஸ்ரேலின் IRP உடன் இணைந்து செயல்படுகிறது”
Also see... 24 மணி நேரத்திற்குள் ஃபாஸ்ட் டெலிவரி செய்யப்படும் OLA Electric Scooter
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதில் ஆரம்பத்தில் உருவான தாக்கம், உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான உற்பத்தி திறனை அளவிட உதவியது. இந்தியா அதன் காலநிலை மற்றும் கார்பன் குறைப்பு இலக்குகளை சந்திக்க எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், மாசை ஏற்படுத்ததாத கார்கள் மற்றும் அவற்றிற்கு தேவையான மாற்றுசக்தி புதுப்பிப்புகளை வழங்க பில்லியன் கணக்கான டாலர்களை ஊக்கத்தொகையாக வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, அதற்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களும் பெரும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric bike