முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி 30 சதவீதம் வரை குறைப்பு - இந்திய கார் தயாரிப்பாளர்கள்

இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரி 30 சதவீதம் வரை குறைப்பு - இந்திய கார் தயாரிப்பாளர்கள்

கார்

கார்

Imported Cars |

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரிட்டனுடனான வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கான வரி விகிதத்தை 30% குறைக்க இந்திய வாகன உற்பத்தியாளர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.

SIAM (Society of Indian Automobile Manufacturers) எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதி உள்ள கடிதம் ஒன்றில் ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக வரி விகித குறைப்புகளை அமல்படுத்தலாம் என்று குறிப்பிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆட்டோமொபைல் மார்க்கெட்களில் ஒன்றின் அணுகலை எளிதாக்கும் என்று தகவல் அறிந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகள் தற்போது இந்தியாவில் 60% முதல் 100% வரை வேறுபடுகின்றன.மேலும் உலகிலேயே இந்தியாவில் தான் இதற்கு அதிக வரிகள் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் பிரிட்டனுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்திய வாகன உற்பத்தியாளர்களால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இந்தியா இந்த வாய்ப்பை பிரிட்டனுக்கு வழங்கியதா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.

உலகின் பெரிய கார் சந்தையாக இருக்கும் இந்தியாவில் காணப்படும் 60% முதல் 100% வரையிலான இறக்குமதி வரிகள் Tesla Inc போன்ற நிறுவனங்களின் விமர்சனத்தை சந்தித்தது மற்றும் இந்தியாவிற்குள் தனது வாகனத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் நிறுத்தி வைத்தன. இந்த் சூழலில் வெளியாகி இருக்கும் இந்த தகவல் குறித்த விவரங்களுக்கு SIAM மற்றும் மத்திய வர்த்தக அமைச்சகம் தற்போது வரை பதிலளிக்கவில்லை.

முன்னதாக உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு காட்டப்படும் வரி சலுகைகள் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை குறைத்து விடும் என்று வாதிட்ட இந்திய வாகன உற்பத்தியாளர்களின் மாற்றத்திற்கு காரணம் என்னவென்பதை விவரமறிந்த சிலர் கூறி இருக்கிறார்கள். அதன்படி மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளிடம், இந்தியா பிரிட்டனுக்கு ஆட்டோக்களில் ஏதாவதொரு சலுகையை வழங்க வேண்டும் என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உறுதியாக கூறிய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனங்கள் வரிகளை குறைக்கும் திட்டத்தைக் கொண்டு வரவில்லை என்றால், அரசு அவர்களுக்காக அதைச் செய்யும் என கோயல் கறாராக கூறியதால் இந்திய வாகன உற்பத்தியாளர்கள் மத்தியில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிகிறது.

Also Read : பயணிகள் கார்களுக்கான 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை ஓராண்டுக்கு ஒத்தி வைத்த மத்திய அரசு - காரணம் என்ன?

Volkswagen AG மற்றும் Mercedes-Benz போன்ற நிறுவனங்கள் இந்தியாவை ஒரு பெரிய வளர்ச்சி சந்தையாக கருதும் நிலையில் இந்தியா மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது, மேலும் 2023-ஆம் ஆண்டுக்குள் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பெரிய நிறுவனங்களும் க்ளீன்மொபிலிட்டியில் கவனம் செலுத்தி வருவதால் வரி குறைப்பு எலெக்ட்ரிக் வாகனங்களை எளிதாக இறக்குமதி செய்வதற்கு வழிவகுக்கும் இது உள்நாட்டு நிறுவனங்களை பாதிக்க கூடும் என்று சில நிறுவனங்கள் கவலைப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

First published:

Tags: Automobile, Car, India, Piyush Goyal