• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்து இந்தியா உலக சாதனை!

உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை அமைத்து இந்தியா உலக சாதனை!

உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை

உலகிலேயே மிக உயரமான இடத்தில் சாலை

இந்த 52 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கட்டி முடித்தனர்.

  • Share this:
இந்திய இராணுவம் அவ்வப்போது பல சாதனைகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புதிய கின்னஸ் உலக சாதனையை செய்துள்ளது. இந்திய இராணுவத்தின் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) உலகிலேயே மிக உயரமான இடத்தில் மோட்டார் சாலையை நிறுவியுள்ளது. இதை படிக்கும் பலருக்கும் இந்தியாவின் உயரமான சாலை பயணம் கொண்ட லடாக் தான் நினைவுக்கு வரும்.

ஆம், கடல் மட்டத்தில் இருந்து 19,300 அடி உயரத்தில் உள்ள லடாக்கில் தான் இந்த மோட்டார் சாலைகளை அமைத்து உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதன் மூலம் இனி லடாக்கிற்கு பயணம் செல்வோர் எந்த வித தடையுமின்றி எளிதில் சென்று வரலாம். மேலும் இதனால் அதிக சுற்றுலா பயணிகள் இந்த சாலைகளை பயன்படுத்துவதன் மூலம், சுற்றுலாத்துறையும் பெரிய அளவில் வளர்ச்சி பெறும்.

உலகின் உயரமான இந்த சாலையானது கிழக்கு லடாக்கின் மற்ற பகுதிகளை உம்லிங் லா பாஸ் (Umlingla Pass) வழியாக இணைக்கிறது. இது போன்ற சவாலான சாலைகளை எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO) அதிக அளவில் அமைத்து வந்திருக்கிறது. இந்திய இராணுவத்தை சேர்ந்த இந்த அமைப்பு தான் தற்போது லடாக்கில் இந்த சாலையை அமைத்துள்ளனர். இந்த சாலை சுமார் 52 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

கின்னஸ் உலக சாதனையை புரிந்ததற்காக ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான நிதின் கட்கரி, எல்லைப்புறச் சாலைகள் அமைப்பிற்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார். மேலும் இதை பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் "உலகிலேயே மிக உயரமான மோட்டார் சாலையை 19024 அடிக்கு மேலுள்ள லடாக்கின் உம்லிங் லா பாஸ் வழியாக அமைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்த @BROindia எல்லைப்புறச் சாலைகள் அமைப்பிற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்த 52 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலையை இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கட்டி முடித்தனர். தற்போது இந்த சாலையானது கிழக்கு லடாக்கில் உள்ள ச்சுமார் செக்டரை இணைக்கிறது. மேலும் லடாக்கில் இருந்து சிசும்லே மற்றும் தேம்சுக் ஆகிய இடங்களுக்கு போவதற்கு மாற்று வழியாக இது அமைந்துள்ளது. எனவே உள்ளூர் மக்களுக்கு இந்த சாலையானது பெரிதும் உதவியாக இருக்கும்.

Also read... உலக கழிப்பறை தினம் - நீர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை நோக்கி செயல்பட ஜல் சக்தி அமைச்சர் அழைப்பு!

கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் இந்த சாலை இருப்பதால், குளிர் காலங்களில் -40 டிகிரி செல்ஸியஸ் அளவில் இங்கு குளிர் இருக்கும். மேலும் கடல் மட்டத்தை விடவும் இங்கு 50% குறைவாகவே ஆக்சிஜன் இருக்கும். முன்னதாக பொலிவியா நாட்டில் 18,953 அடி உயரத்தில் அமைத்த சாலை தான் உலகிலேயே உயரமான சாலையாக இருந்தது. இது உடுருஞ்சு என்கிற எரிமலையை இணைக்கிறது. இதன் உலக சாதனையை தற்போது உம்லிங் லா பாஸ் முறியடித்துள்ளது.

எது எப்படியோ இனி லடாக் பயணம் செல்வோருக்கு இந்த புதிய சாலை மிக உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: