2026-ம் ஆண்டு முதல் ஓலா, உபெரில் மின்சாரக் கார்களுக்கு மட்டுமே அனுமதி!

இந்த அறிவிப்புகளுக்கு எல்லாம் முன்னரே ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்தியது.

2026-ம் ஆண்டு முதல் ஓலா, உபெரில் மின்சாரக் கார்களுக்கு மட்டுமே அனுமதி!
ஓலா
  • News18
  • Last Updated: June 8, 2019, 3:45 PM IST
  • Share this:
வாடகை டாக்ஸி நிறுவனங்களான ஓலா, உபெர் ஆகிய நிறுவனங்கள் 2016-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

காற்று மாசுபாட்டைக் குறைக்க இந்திய அரசு வாடகை டாக்ஸி நிறுவனங்களுக்கு இந்த உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓலா, உபெர் ஆகிய நிறுவனங்கள் 2021-ம் ஆண்டுக்குள் தங்களது வாகனங்களில் 2.5% எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்றும் 2022-க்குள் 5%, 2023-ம் ஆண்டுக்குள் 10%, 2023-ம் ஆண்டுக்குள் 40% மாற்றி அமைக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.


இந்த அறிவிப்புகளுக்கு எல்லாம் முன்னரே ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களைப் பயன்படுத்தியது. ஆனால், போதுமான கட்டுமான வசதி, அதிக செலவு ஆகிய காரணங்களால் ஓலாவின் முயற்சி பாதியிலேயே கைவிடப்பட்டது. முடிந்தவரையில் இந்த உத்தரவு தலைநகர் டெல்லியில் விரைவாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்கிறது.

மேலும் பார்க்க: ஜிப்ஸி தயாரிப்பை மீண்டும் கையில் எடுத்தது மாருதி சுசூகி!
First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்