பட்ஜெட் 2019- ’எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா’

எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு 10 முதல் 15 சதவிகிதம் வரையில் சுங்கவரியைக் குறைத்திருந்தது.

Web Desk | news18
Updated: February 1, 2019, 8:10 PM IST
பட்ஜெட் 2019- ’எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா’
பியூஸ் கோயல்
Web Desk | news18
Updated: February 1, 2019, 8:10 PM IST
’எரிசக்தித் துறையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மூலம் ஒரு புரட்சியை இந்தியா வழிநடத்தும்’ என இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் பியூஷ் கோயல் பேசினார்.

பியூஷ் கோயல் ஆட்டோமொபைல் துறை குறித்துப் பேசுகையில், “வருகிற 2030-ம் ஆண்டு வரையில் 10 விதமான பரிணாமங்களைக் குறிக்கோளாகக்கொண்டு செயல்பட உள்ளது. அதில், மூன்றாவது பரிணாமாக ‘தூய்மை எரிசக்தி மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள்’ உள்ளது.

இந்தப் பரிமாணம்தான் இந்தியாவை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்த்தும். இதனால், அயல்நாடுகளிடம் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே எலெக்ட்ரிக் சக்தி மூலம் செயல்பட முடியும்” என்றார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் ஆட்டோமொபைல் துறை மிகவும் வளர்ந்து வரும் ஒரு துறையாகவே உள்ளது. ஆனாலும், இந்த இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னர், எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு 10 முதல் 15 சதவிகிதம் வரையில் சுங்கவரியைக் குறைத்திருந்தது.

மேலும் பார்க்க: பட்ஜெட் 2019... விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 6000 ரூபாய்
First published: February 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...