ஆட்டோ மொபைல் துறையில் கொடிக்கட்டி பறந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி, உலக அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது இந்தியா. ஜப்பானை விட 4.25 மில்லியன் அதிக கார்களை விற்பனை செய்ததன் மூலம் இந்த புதிய மைல் கல்லை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவில் 4.13 மில்லியன் புதிய கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது 4.25 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. அதில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வருடங்களாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையானது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 4 மில்லியன் கார்களை விற்பனை செய்த இந்தியா, 2018 ஆம் ஆண்டில் 4.4 மில்லியன் அளவிலான கார்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவே 2020 ஆம் ஆண்டை பொறுத்தவரை வெறும் 3 மில்லியன் கார்களை மட்டுமே இந்தியா விற்பனை செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நிலவிய கொடுமையான கொரோனா தொற்று லாக்டவுன் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளும் இதற்கு காரணம். 2021 ஆம் ஆண்டு மீண்டும் சூடு பிடித்த ஆட்டோ மொபைல் விற்பனை வருடத்திற்கு 4 பில்லியன் கார்கள் என்ற இலக்கை அடைந்தது.
2022 ஆம் ஆண்டில் மீண்டும் கார் விற்பனை அதிகரித்துள்ளது. எரிபொருளில் இயங்கும் கார்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை ஒப்பிடுகையில் எரிபொருளில் இயங்கும் கார்கள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டில் ஆட்டோமொபைல் துறை மீண்டும் சூடு பிடித்துள்ளது என்று கூறலாம். டாடா மோட்டார்ஸ் மற்றும் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது விற்பனையில் முன்னேற்றத்தை கண்டுள்ளன.
பிரிட்டிஷ் கம்பெனி ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவில் வெறும் 8.5% மக்கள் தான் கார்களை வைத்துள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் புதிய கார்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளது. இதற்கு இடையில் பெட்ரோலியத்தின் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரியால் அரசாங்கம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துமாறு பொதுமக்களை ஊக்குவித்து வருகிறது. மேலும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்கும் அனைவருக்கும் உதவித்தொகைகளையும் அளித்து வருகிறது.
சீனாவை பொருத்தவரை ஓமைக்ரோ தொற்றினால் அதன் ஆட்டோமொபைல் உற்பத்தி மிகப் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக போதுமான அளவு ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை அந்நாட்டினரால் தயாரிக்க முடியவில்லை. 1990 ஆவது ஆண்டில் ஜப்பான் நாடு 7.77 மில்லியன் கார் விற்பனை செய்து புதிய சாதனை படைத்தது ஆனால் அதன் பிறகு ஒரு ஆண்டிற்கு பாதிக்கும் குறைவான கார்களையே விற்பனை செய்து வருகிறது.
2006 ஆம் ஆண்டு ஜப்பானிய பின்னுக்கு தள்ளி சீனா உலகின் இரண்டாவது மிகப்பெரும் ஆட்டோமொபைல் சந்தை என்ற பெருமையை பெற்றது. 2009 ஆம் ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Car