வருகிறது புதிய ’ஜாவா’ - பைக் பிரியர்கள் கொண்டாட்டம்

வருகிறது புதிய ’ஜாவா’ - பைக் பிரியர்கள் கொண்டாட்டம்
புதிய ஜாவா ஸ்பெஷல் 350
  • News18
  • Last Updated: July 5, 2018, 7:09 PM IST
  • Share this:
ஜாவா மோட்டார் சைக்கிளின் புதிய வகை மாடல் இந்திய சந்தைகளில் இந்த ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புல்லெட்,  இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு வண்டியாக இருந்தது. ஒரு காலத்தில் புல்லட் வைத்திருப்பது சமூகத்தில் ஒருவரின் ‘ஸ்டேட்டசை’ சுட்டிக்காட்டுவதாக இருந்தது. புல்லட் வைத்திருந்தால் மெயிண்டனன்ஸ் செலவு அதிகம் ஆகும் என்பதால் அதை பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கி வந்தனர். ஆனாலும் அது பலருக்கு கனவு வண்டியாக இருந்ததை அறிந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம், புல்லெட்டை ரீமாடலிங் செய்து சந்தையில் இறக்கியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
பழைய ஜாவா பைக்ஸ்


இதனை தொடர்ந்து, இளைஞர்களுக்கு கிளாசிக் பைக்களின் மேலுள்ள மோகத்தை உணர்ந்து கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம், புல்லட்டை போல இன்னொரு ‘கிளாசிக்’ வகை மோட்டார் சைக்கிளான ஜாவா வண்டிகளை மறுபடியும் இந்திய சந்தைகளில் கொண்டுவர முடிவெடுத்துள்ளது.

1960-களில் சந்தைக்கு வந்த ஜாவா வண்டிகள், ஜாவா, எஸ்டி என்ற இரு பெயர்களில் விற்பனை செய்யப்பட்டன. பின்பு 1990-களில் இந்த வண்டிகளைத் தயாரிப்பதை ‘ஐடியல் ஜாவா’ நிறுவனம் நிறுத்தியது.

ஆனால் கிளாசிக் மோட்டர் சைக்கிள் பிரியர்கள் இன்றும் ஜாவா வண்டிகளை பல லட்சங்கள் கொடுத்து வாங்க தயாராக உள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் முதல் பலருக்கும் ஜாவா பைக்கள் இன்றும் அவர்களிம் மனம் கவர்ந்த வண்டியாக உள்ளது.

Loading...
இந்நிலையில் சமீபத்தில் மஹிந்த்ரா நிறுவனம் இந்தியாவில் ஜாவா வண்டிகளை விற்கும் உரிமையை  வாங்கியது. ஜாவா 350 வண்டியின் புதிய மாடலான ’ஜாவா ஸ்பெஷல் 350’ வண்டியை  ஐரோப்பிய நாடுகளில் ஜாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியாவிலும் கூடிய விரைவில் ஜாவா வண்டிகள் சந்தைக்கு வரும் என்று மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய ஜாவா ஸ்பெஷல் 350

ஜாவா வண்டிகள் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற வாடிக்கையாளர் ஒருவரின் கேள்விக்கு, “இந்த ஆண்டு முதல் ஜாவா வண்டிகள் இந்திய சந்தைக்கு வரும்” என்று ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், 398 சிசி ட்வின் இஞ்சினோடு வரும் புதிய ஜாவா, 27.6 பி.ஹெச்.பி திறன் கொண்டது. வட்ட வடிவிலான ’விண்டேஜ்’ ஹெட் லைட்டுகள் கொண்டுள்ள புதிய ஜாவா, தட்டையான சீட்டுடன் ‘கஃபே ரேசர்’ மாடலில் வருகிறது. இந்திய சந்தைக்கு வரும் புதிய ஜாவா மோட்டார் சைக்கிளை எதிர்நோக்கி, பைக் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
First published: July 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...