Home /News /automobile /

2025-ம் ஆண்டுக்குள் இந்தியா ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்கும்.. கியா நம்பிக்கை

2025-ம் ஆண்டுக்குள் இந்தியா ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்கும்.. கியா நம்பிக்கை

Kia EV6

Kia EV6

தென் கொரியாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான கியா, வரும் 2025-ஆம் ஆண்டளவில் இந்தியா ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் என்று எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறது.

    நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனமாக உள்ள Kia நிறுவனம், அப்படி ஆண்டுக்கு 2 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் பட்சத்தில், மொத்த பயணிகள் வாகன விற்பனையில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சுமார் 5%-ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கியா நிறுவனம் கூறி இருக்கிறது. இது தொடர்பாக பேசி இருக்கும் கியாவின் மூத்த நிர்வாகி ஒருவர் உள்கட்டமைப்பு, PLI திட்டம் நுகர்வோர் மனநிலை மற்றும் அரசாங்க முதலீடுகள் உள்ளிட்டவை வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக இருக்கின்றன என்று பட்டியலிட்டுள்ளார்.

    கியா இந்தியா நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி மியுங்சிக் சோஹ்ன் (MyungSik Sohn) பேசுகையில், ஐரோப்பா மற்றும் சீனாவில் EV-க்கள் வேகமாக ஏற்று கொள்ளப்படுவதற்கான முக்கிய காரணங்களாக அரசாங்கத்தின் வலுவான ஒழுங்குமுறைக் கொள்கைகள் மற்றும் EV உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அதன் மிகப்பெரிய முதலீடுகள் உள்ளிட்டவை இருக்கின்றன. எனவே EV-க்களின் புழக்கம் அதிகரிப்பது ஒரு நாட்டின் அரசாங்கத்தை பொறுத்தது. எனவே இந்திய அரசும் இதையே செய்தால், அடுத்த 3 - 4 ஆண்டுகளில் EV-க்கள் விற்பனை நாட்டில் உச்சத்தை எட்டும் என்று நம்புகிறேன் என கூறி இருக்கிறார்.

    மேலும் பேசிய அவர் இந்திய அரசு PLI திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் OEM-க்கள் அதற்கு விண்ணப்பித்துள்ளன. எல்லாம் சரியாக நடந்தால், இந்தியாவில் கார் சந்தை வரும் 2025-ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 2 லட்சம் யூனிட் EV-க்களுடன் 4 மில்லியன் விற்பனையை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். கியா தனது EV6-ஐ ரூ.59.95 லட்சம் மற்றும் ரூ.64.95 லட்சம் வரம்பில் அறிமுகப்படுத்தி இருந்தாலும் முழுமையாக கட்டப்பட்ட யூனிட்களான (CBU) இந்த காரின் 100 யூனிட்களை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு என்று ஒதுக்கியுள்ளது.

    Also Read : எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு கிடுக்குப்பிடி... மத்திய அரசு அதிரடி முடிவு!

    இந்த 100 EV6 யூனிட்களின் டெலிவரி செப்டம்பர் முதல் தொடங்க உள்ளது என்றாலும் நாங்கள் எங்கள் சப்ளையர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் தர முயற்சிக்கிறோம் என்று கூறியுள்ளனர். எனவே அவர்களிடமிருந்து நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புவோம் என்றார் யுங்சிக் சோஹ்ன்.

    கியா இந்தியாவின் மூத்த அதிகாரி ஹர்தீப் சிங் ப்ரார் பேசுகையில், , நாட்டின் 12 மாநிலங்களில் 15 EV டீலர்ஷிப்களைத் திறந்துள்ளோம். EV6 வாடிக்கையாளர்களுக்காக ஒவ்வொரு டீலர்ஷிப்பிலும் 150kW சார்ஜரை நிறுவுவதன் மூலம் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளோம். இது மற்ற OEM-க்களின் வாடிக்கையாளர்களுக்கும் திறக்கப்படும். கிராமப்புறங்களில் இருந்தும் சில புக்கிங்ஸ்கள் வந்துள்ளன. ஆனால் அந்த இடங்களில் உள்கட்டமைப்பு இல்லை என்பதை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரிவித்துள்ளோம் என்றார்.

    இந்தியாவில் ஒட்டுமொத்த கார் சந்தை இந்த ஆண்டு சுமார் 3.5 மில்லியன் யூனிட்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் மின்சார நான்கு சக்கர வாகனங்கள் அவற்றில் 2% அல்லது 70,000 யூனிட்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கியா கார்ப்பரேஷன் 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 6.6% உலகளாவிய EV சந்தைப் பங்கையும் அதன் விற்பனையில் 25% பங்கையும் EV-க்களில் இருந்து இலக்காக கொண்டுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile, Kia motors

    அடுத்த செய்தி