ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் மின்சார வாகனங்களுக்கான (EV) பிரத்யேக இணையதள போர்ட்டலை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "E-Amrit" என அழைக்கப்படும் இந்த இணையதளம் மின்சார வாகனங்களை வாங்குதல், முதலீட்டு வாய்ப்புகள், கொள்கைகள் மற்றும் மானியங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் வழங்கும் என்று NITI ஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் EV-க்கள் தொடர்பான அனைத்து கட்டுக்கதைகளையும் இந்த பிரத்யேக இணைய போர்டல் உடைக்கும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மின்சார வாகனங்களை தேர்ந்தெடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் அரசாங்கம் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளையும் புதிய இணையதளம் பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த போரட்டலில் மேலும் பல அம்சங்களைச் சேர்க்க விரும்புவதாக NITI ஆயோக் தெரிவித்துள்ளது. அதேபோல, E-Amrit போர்ட்டலை பயனர்-நட்புமிக்கதாக மாற்ற புதுமையான கருவிகளையும் அறிமுகப்படுத்த உள்ளது.
E-Amrit போர்டலை NITI ஆயோக், இங்கிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து அறிவு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளது. இது இரு நாட்டு பிரதமர்களால் கையெழுத்திடப்பட்ட இங்கிலாந்து-இந்தியா கூட்டு சாலை வரைபடம் 2030 இன் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த போர்ட்டலின் வெளியீட்டு விழாவில் இங்கிலாந்து உயர்நிலை காலநிலை நடவடிக்கை சாம்பியன் நைகல் டாப்பிங் மற்றும் NITI ஆயோக் ஆலோசகர் சுதேந்து ஜோதி சின்ஹா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சமீப காலமாக, போக்குவரத்தின் டிகார்பனைசேஷன் மற்றும் மின்சார இயக்கத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் மின்சார எதிர்காலத்தை நோக்கி நகர்வதை துரிதப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, FAME மற்றும் PLI போன்ற திட்டங்கள் EVக்களை முன்கூட்டியே ஏற்றுக்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தன.
Also read... மாருதி சுசுகியின் ஸ்மார்ட் பைனான்ஸ் - ரூ.6,500 கோடி கடன் வழங்கல்
அதேபோல இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் சில தனிப்பட்ட மின்சார வாகனக் கொள்கைகளை அறிமுகப்படுத்தி மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவித்து வருகின்றன. இதில் இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை வாங்குவதற்கான மானியங்களும் அடங்கும். சில மாநிலங்கள் மின்சார வாகனங்களுக்கு பதிவு கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் டெல்லி தனது மின்சார வாகனக் கொள்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முன்னோடியாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் EV-க்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் டெல்லி நகரமானது முன்னேற்றத்தை கண்டுள்ளது. அதனை தொடர்ந்து இப்போது அதன் கொள்கையிலிருந்து மானியங்களின் பலனை திரும்பப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.