• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • கார் உற்பத்தியில் உலகளவில் 5வது இடத்தைப் பிடித்த இந்தியா.. முதலிடத்தில் சீனா

கார் உற்பத்தியில் உலகளவில் 5வது இடத்தைப் பிடித்த இந்தியா.. முதலிடத்தில் சீனா

கோப்புப்படம்

கோப்புப்படம்

கார் உற்பத்தியில் உலகளவில் 5வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

  • Share this:
ஒரு காலத்தில் சைக்கிள் அனைத்து வீடுகளிலும் இருந்தது. தற்போது அந்த இடத்தை கார் பிடித்து வருகிறது எனச் சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது. வேலைக்குச் செல்லுதல், நெருங்கிய உறவினர்கள் அல்லது நண்பர்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றல் போன்றவற்றுக்கு பொதுப் போக்குவரத்தைக் காட்டிலும் காரை பலர் வசதியாகக் கருதுகின்றனர். வாடகை காரிலாவது சென்றுவிட்டு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் ஏராளம். அந்த வகையில் கார் வாங்குவதை மக்கள் அதிகம் விரும்புவதால் கார்களின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது.

கார் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், கார்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. UK-வில் செயல்படும் மணிஷேக் என்ற அமைப்பு உலகம் முழுவதும் நடத்திய ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளது. அதில், நம் அண்டை நாடான சீனா உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்டுக்கு 25.7 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யும் சீனா, நிமிடத்துக்கு 48.9 கார்களை உற்பத்தி செய்கிறது.

இந்தியா உலகளவில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. நிமிடத்துக்கு 8.6 கார்களை உற்பத்தி செய்கிறது. சீனாவுடன் இந்தியாவை ஒப்பிடும்போது, அந்த நாடு 10 மடங்கு அதிகமான கார்களை உற்பத்தி செய்கிறது. ஆண்டுதோறும் 100 மில்லியன் கார்கள் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்துள்ள மணிஷேக் நிறுவனம், சீனாவின் அசுர உற்பத்திக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள்கூட ஈடுகொடுக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

கார் உற்பத்தியில் மிகப் பெரிய நிறுவனங்களாக உள்ள SAIC மற்றும் Dongfeng போன்ற நிறுவனங்கள் சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக கார் உற்பத்தியில் சீனா கோலோச்சி வருவதற்கு இதுவே முக்கியக் காரணம் என்றும் மணிஷேக் நிறுவனம் கூறியுள்ளது.

Also read: டிசம்பர் 31 வரை சுமார் ரூ.3 லட்சம் வரை ஆஃபர்களை அள்ளி வீசிய ஜீப் நிறுவனம்!

கார் உற்பத்தியில் முதல் 5 இடங்களைப் பிடித்திருக்கும் நாடுகளின் பட்டியல்:

1. சீனா - 48.9 per minute

2. அமெரிக்கா - 20.7 per minute

3. ஜப்பான் - 18.4 per minute

4. ஜெர்மனி - 8.9 per minute

5. இந்தியா - 8.6 per minute

இதேபோல், உலகளவில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 20 நிறுவனங்களில் டொயோட்டா நிறுவனம் நிமிடத்திற்கு 19.9 கார்களை உற்பத்தி செய்து முதல் இடத்தில் உள்ளது. மேலும், ஜப்பானைச் சேர்ந்த கார் உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் லெக்சஸ் ஆண்டுக்கு 10.4 மில்லியன் கார்களை உற்பத்தி செய்கின்றனர். இதில், உலகளவில் அதிக கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பட்டியலைக் காணலாம்.

1. டொயோட்டா - 19.9 per minute

2. வோல்க்ஸ்வாகன் - 19.8 per minute

3. ஹூண்டாய் - 13.7 per minute

4. ஜெனரல் மோட்டார்ஸ் - 13.0 per minute

5. ஃபோர்டு - 12.2 per minute

கார் நிறுவனங்களில் அதிக வருவாய் ஈட்டும் பட்டியலிலும் டொயோட்டா மற்றும் வோல்க்ஸ்வாகன் நிறுவனங்கள் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர். அதன்படி இரு நிறுவனங்களும் நிமிடத்துக்கு 5 லட்சம் டாலர்களை வருவாயாக ஈட்டுகின்றன. இருப்பினும், இரு நிறுவனங்களும் ஈட்டும் வருவாய் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

வருவாய் அடிப்படையில் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ள கார் நிறுவனங்கள்:

1. டொயோட்டா - $533,676

2. வோல்ஸ்க்ஸ்வாகன் - $523,592

3. டைம்லர் - $359,970

4. ஃபோர்டு - $ 285, 198

5. ஹோண்டா - $270,928

உலகளவில் கார்கள் அதிக விற்பனையாகும் சந்தையாக இந்தியா உருவாகி வருவதாகவும் மணிஷேக் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: