முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / உலகின் டாப் 3 வாகன சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை குறைவு

உலகின் டாப் 3 வாகன சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை குறைவு

மின்சார கார்

மின்சார கார்

EV Cars sales in India : உலகின் டாப் 3 ஆட்டோ மார்க்கெட்களில் ஒன்றாக நம் இந்தியா வில் மின்சார கார்களில் விற்பனை குறைவாகவே உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் டாப் 3 ஆட்டோ மார்க்கெட்களில் ஒன்றாக நம் இந்தியா இருந்து வருவது உண்மையில் ஒரு சாதனை தான். ஆனால் உலகளாவிய அழுத்தங்கள் காரணமாக EV வாகனங்களை அதிகரிக்க செய்யும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர முயற்சிகளுக்கு மத்தியில், நாட்டில் இன்னும் அதிக கார்கள் இன்டெர்னல் கம்ப்யூஷன்-எஞ்சின் கொண்டதாகவே இருக்கின்றன.

கடந்த ஆண்டு நம் நாட்டில் 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபோர்-வீலர் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த சாதனை விற்பனை மூலம் இந்தியா ஜப்பானை விஞ்சியது மற்றும் சீனா,அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளியது. இடையில் விற்பனை குறைந்தாலும் இப்போது பொருளாதாரம் சற்று சீரான நிலையில் இருப்பதால் மக்களிடையே கார் வாங்கும் திறன் இயல்புக்கு திரும்பியுள்ளது.

எனினும் நான்கு சக்கர வாகனங்களை காட்டிலும் இருசக்கர வாகனங்களின் விலை குறைவு என்பதால் பரந்த சந்தை பெரும்பாலும் மோட்டார் பைக்குகளை கொண்டது. ஆர்வமுள்ள இந்தியர்கள் பாசெஞ்சேர் செக்மென்ட் வெஹிகிள்ஸ்களை வாங்க ஈடுபாடு காட்டுகின்றனர்.

இந்தியாவில் EV கார்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போ 2023-ல் சீனாவின் BYD Co. மற்றும் Kia Corp போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து நம்பிக்கைக்குரிய அறிவிப்புகள் வெளியாகின மற்றும் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆனால் சிக்கல் என்னவென்றால் அவை விற்பனைக்காக ஷோரூம் வந்தவுடன் விலை எதிர்பார்ப்பதை சற்று அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் EV செக்மென்ட்டின் வெற்றி என்று பார்த்தால் அது எலெக்ட்ரிக் டூ வீலர் மார்கெட்டிற்கு சாதகமாக உள்ளது. இந்த வெற்றியை நான்கு சக்கர வாகனங்களுக்கு கடத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது.

டாடா மோட்டார்ஸ்

ஏனென்றால் நாட்டில் எலெக்ட்ரிக் 2W-ன் பொருளாதாரம் நாட்டில் நன்றாக உள்ளது. எலெக்ட்ரிக் டூ வீலரின் பவர் பேக்ஸ் சிறியவை மற்றும் மலிவானவை. எலெக்ட்ரிக் மோட்டார் பைக்கை வைத்திருப்பது மலிவான ஒன்றாகி விட்டது. அரசின் கூடுதல் சலுகைகளும் எலெக்ட்ரிக் டூவீலர் பக்கம் செல்பவர்களுக்கு உதவியாக உள்ளன.

நம் நாட்டை பொறுத்த வரை பெரிய பேட்டரிகளை சார்ஜ் செய்ய அதிக திறன் மற்றும் மின்னழுத்தம் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள தூரங்கள் மற்றும் அதன் மோசமான போக்குவரத்து EV வரம்பில் உள்ள சிக்கல்கள் பற்றிய கவலைகளை நீட்டிக்க செய்கிறது. பெரும்பாலான உற்பத்தியாளர்களுக்கான செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு வரும் பவர்பேக்ஸ்களின் தரம் குறைவாக உள்ளது. இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் அசோக் லேலண்ட் லிமிடெட் மற்றும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் போன்ற அனைத்து வகையான மாற்று எரிபொருள் வாகனங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Also Read : மணிக்கு 120 கிமீ டாப் ஸ்பீட்... 200 கிமீ மைலேஜ் தரும் DEVOT மோட்டார்ஸின் புதிய எலெக்ட்ரிக் பைக்!

தீர்வு:

EV கார்கள் மிகவும் காஸ்டலி மற்றும் பவர்பேக்ஸ் குறித்த கவலை இருந்தால் யதார்த்தமான தீர்வாக ஹைபிரிட் வாகனங்களை கருத்தில் கொள்ளலாம். இவை கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுகின்றன. ஹைபிரிட் வாகனங்கள் EVக்களுக்குத் தேவையான பேட்டரிகளில் ஐந்தில் ஒரு பங்கு முதல் கால் பகுதியை மட்டுமே பயன்படுத்துகின்றன. அதாவது பவர்பேக்ஸ்களின் விலை உயர்ந்தால் கூட ஹைபிரிட் வாகனங்கள் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன.

தவிர இந்த ஹைபிரிட் கார் மலிவாக மற்றும் செயல்திறனில் திறமையாகவும் இருக்கும். அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள கொள்கைகள் ஏற்கனவே இந்த வாகனங்களை வாங்குவதற்கு மறைமுகமாக ஊக்கமளிக்கின்றன. எனினும் ஹைபிரிட்களின் சிக்கல் ஓட்டுநர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியது. இவை எலெக்ட்ரிக்கில் குறைவாகவும் எரிபொருளைப் பயன்படுத்தி அதிகமாகவும் இயக்கப்படுகின்றன என்கின்றன ஆய்வுகள். ஆனால் ஆற்றல் செலவுகள் மற்றும் உமிழ்வுகள் முன் gas guzzlers-விட சிறந்த தேர்வை வழங்குகின்றன.

இந்தியர்களுக்கு சரியான விலையில் எலெக்ட்ரிஃபிகேஷன் நடக்கும். இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் அந்த திசையில் ஒரு முக்கிய படியாகும். இதற்கேற்ற வகையில் BYD போன்ற நிறுவனங்கள் தங்கள் ஹைபிரிட் வாகனத்தில் சலுகைகளை கொண்டு வர ஊக்குவிப்பது, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான இந்தியாவின் பாதையை ஜம்ப்ஸ்டார்ட் செய்ய உதவும்.

First published:

Tags: Automobile, Cars, China, Electric car, Electric Cars