Home /News /automobile /

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்கும் என்ற பயமா? இனி கவலை இல்லை...வந்தாச்சு ஃபயர்ப்ரூஃப் பேட்டரி!!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடிக்கும் என்ற பயமா? இனி கவலை இல்லை...வந்தாச்சு ஃபயர்ப்ரூஃப் பேட்டரி!!

கோமாகி எலெக்ட்ரிக் டூவீலர்

கோமாகி எலெக்ட்ரிக் டூவீலர்

எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதைத் தவிர்ப்பதற்கான தீர்வு இந்த வாரம் கோமாகி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபயர்ப்ரூஃப் (Fireproof) பேட்டரிகள் வடிவில் வந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி (Komaki),  தீப்பிடிக்காத வகையில் லித்தியம்-அயன் ஃபெரோ பாஸ்பேட் (LiFePO4) ஃபயர்ஃப்ரூப் பேட்டரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.      எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தயக்கம் மற்றும் அச்சங்களுக்கு மத்தியில் பல நிறுவனங்களின் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பனை சரிவைச் சந்தித்து உள்ளது.

    பெட்ரோலில் இயங்கும் டூவீலர் வாங்குவதை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் மக்களின் கவனம் திரும்பிய நிலையில், அவ்வப்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி தீ பிடித்து எரியும் சம்பவங்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் சற்று தொய்வை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் EV பிராண்டான கோமாகி (Komaki), இந்த பிரச்சனைக்கு இப்போது தீர்வை கொண்டு வந்துள்ளது. எலெக்ட்ரிக் டூவீலர்கள் தீப்பிடித்து எரிவதைத் தவிர்ப்பதற்கான தீர்வு இந்த வாரம் கோமாகி நிறுவனத்தால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஃபயர்ப்ரூஃப் (Fireproof) பேட்டரிகள் வடிவில் வந்துள்ளது. அடுத்த மாதம் முதல் தங்களது நிறுவனத்தின் அனைத்து வாகனங்களிலும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் லித்தியம்-அயன் ஃபெரோ பாஸ்பேட் (LiFePO4) ஃபயர்ஃப்ரூப் பேட்டரிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கோமாகி அறிவித்து உள்ளது.

    Also Read :இ-பைக் விற்பனையில் எகிறும் ஹீரோ மோட்டர்ஸ்... ஓலா, ஏதர் சறுக்கல்

    கோமாகி எலெக்ட்ரிக் பிரிவின் டைரக்டர் குஞ்சன் மல்ஹோத்ரா இது பற்றிக் கூறுகையில், எங்களது இந்த புதிய அறிமுகம் சந்தையில் நம்பகமான பிராண்டாக கோமாகியை மேலும் நிலைநிறுத்தும். மேலும் பயன்படுத்த எளிதான மொபைல் அப்ளிகேஷனை நாங்கள் உருவாக்கியுள்ளோம், இது பேட்டரியின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வகையில், எளிமையான ஸ்மார்ட்போன் ஆப்-ஆக உருவாக்கியுள்ளது. பேட்டரி ஆரோக்கியத்தைப் பற்றி யூஸர்கள் மற்றும் டீலர்களுக்கு இந்த மொபைல் ஆப் அலெர்ட் கொடுக்கும் என்றார்.

    கோமாகி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இதன் புதிய EV பேட்டரியான LiFePO4 சாதாரண எலெக்ட்ரிக் டூவீலர் பேட்டரியை விட அதிக தீ எதிர்க்கும் திறன் (fire resistant) கொண்டது. LiFePO4 பேட்டரி செல்களில் அதிக இரும்பு உள்ளடக்கம் (iron content) இருப்பதால் அதிக பாதுகாப்பை வழங்குகிறது. எனவே தீவிர நிகழ்வு அல்லது மோசமான சூழ்நிலையிலும் கூட மற்ற நிறுவனங்களின் பேட்டரிகளை விட அதிக ஃபயர்ஃப்ரூப் தன்மையை எங்களது புதிய பேட்டரி கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ஹீட் ஆவதால் சிக்கல் ஏற்படாமல் இருக்க பேட்டரி பேக்கில் உள்ள செல்களின் எண்ணிக்கையை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள கோமாகி இது பேட்டரி பேக்கிற்குள் உருவாகும் ஒட்டுமொத்த வெப்பத்தைக் குறைக்க உதவும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    Also Read :மஹிந்திரா நிறுவனத்தின் புதிய காருக்கு இவ்வளவு வரவேற்பா! அரை மணி நேரத்தில் 1 லட்சம் பேர் புக்கிங்

    புதிய LiFePO4 ஆனது 2500-3000 லைஃப் சைக்கிளை கொண்டுள்ளது, இது NMC பேட்டரிகளின் 800 லைஃப் சைக்கிளை ஒப்பிடும் போது மிக அதிகம். அதே போல LiFePO4 பேட்டரியானது Komaki Venice வாகனத்தில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜையும், Komaki SE மற்றும் TN95 இல் 180 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது. இது முன்பு நிறுவப்பட்ட பேட்டரிகளை விட அதிக மைலேஜ் ஆகும். புதிய தொழில்நுட்பத்தால் EV பழுதுபார்க்க சென்றால், இந்த நேரத்தில் பேட்டரி பழுதடையும் வாய்ப்பு குறைவு. மேலும், புதுமையான ஆக்டிவ் பேலன்சிங் மெக்கானிசம் பேட்டரி செல்களை சில நொடிகளில் சமன் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Electric bike, Fire accident

    அடுத்த செய்தி