Home /News /automobile /

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க மத்திய அரசு திட்டம் - என்ன காரணம்?

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்க மத்திய அரசு திட்டம் - என்ன காரணம்?

இந்தியாவில்  20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம்

இந்தியாவில் 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை படிப்படியாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • tamil , India
    பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலக்கும் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 20 சதவீத எத்தனால் கலக்கும் திட்டத்தை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி 2025ஆம் ஆண்டுக்குள் முழுமையான இலக்கை எட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் போன்ற புதை வடிவ எரிபொருட்களின் விலை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல், அதன் மூலமாகச் சுற்றுச்சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. கச்சா எண்ணெய் ஆதாரங்கள் குறைந்து வருவதும், சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார போட்டிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கிறது.

    இந்த நிலையில், பெட்ரோலில் எத்தனால் கலந்து விற்பனை செய்வதன் மூலமாக ஒருபக்கம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க முடியும் என்பதுடன், அதற்கான செலவினமும் சற்று குறைவாக இருக்கிறது. இதனால், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை படிப்படியாக அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

    Also Read : பட்ஜெட்டில் சொல்லி அடிக்கும் மாருதி சுசுகி.. ஸ்டைலிலும் அசத்தும் புதிய ஆல்டோ கே10 மாடல்

    பெட்ரோலில் 10 சதவீத எத்தனாலை கலக்க வேண்டும் என்ற இலக்கை இந்தியா இந்த ஆண்டு அடைந்தது. இலக்கை அடைய நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே இந்த சாதனையைச் செய்ய முடிந்தது. 2025ஆம் ஆண்டில் முழுமையாக இலக்கை எட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி கூறுகையில், “பெட்ரோலில் 5இல் ஒரு பங்கு எத்தனால் கலக்கப்படும். அதாவது இதனை இ20 பெட்ரோல் எனக் குறிப்பிடுகிறோம். பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலக்கப்படும். இது 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும். இலக்கை 2025ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

    பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் கலந்ததன் மூலமாக இந்தியாவுக்கு சுமார் ரூ.41,500 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.40,600 கோடி பலன் விவசாயிகளின் நலனுக்காகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. . பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதன் மூலமாக ஆண்டுதோறும் 4 பில்லியன் டாலர்களை சேமிக்க முடியும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.

    உலக உயிரி எரிபொருள் தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டபோது, ஹரியாணா மாநிலம் பானிபட் நகரில் 2ஆம் தலைமுறை எத்தனால் உற்பத்தி ஆலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்  என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Petrol, Petroleum Minister

    அடுத்த செய்தி