72-வது சுதந்திர தினம்: இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மாற்றியமைத்த 5 கார்கள்

news18
Updated: August 15, 2018, 3:25 PM IST
72-வது சுதந்திர தினம்: இந்திய ஆட்டோமொபைல் சந்தையை மாற்றியமைத்த 5 கார்கள்
அம்பாசெடர்
news18
Updated: August 15, 2018, 3:25 PM IST
உலக நாடுகளில் இந்தியா ஒரு மிகப்பெரிய ஆட்டோமொபைல் சந்தை. ஒரு வருடத்திற்கு 25 லட்சம் வாகனங்கள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. வளர்ந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையைப் பல நிறுவனங்களும் குறி வைத்து, வாகனங்களை அறிமுகப்படுத்திய வண்ணமே இருக்கின்றன.

கார்களை பொறுத்தவரை கடந்த 20 வருடங்களில் பெருமளவில் விற்பனை அதிகரித்துள்ளது. அதற்கு முன்பு வரை இந்திய கார் சந்தை, இறக்குமதியாகும் கார்களை நம்பியே இருந்துவந்ததால், அது நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு எட்டா கனியாகவே இருந்து வந்தது. 1983-ம் ஆண்டு இந்திய அரசு ஜப்பானிய நிறுவனமான சுஸுகியுடன் இணைந்து மாருதி சுஸுகி இந்தியா தொடங்கப்பட்டது. அதன் பின்னரே நடுத்தர வர்க்கத்தின் பட்ஜெட்டுக்குள் அடங்கும் கார்கள் விற்பனைக்கு வரத் தொடங்கின.

1991-ம் ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் கொண்டுவரப்பட்ட தாராளமயக் கொள்கைக்குப் பிறகு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இந்திய சந்தை திறந்துவிடப்பட்டது. அதன் பின்னரே ஹோண்டா, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கார் கம்பெனிகள் இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்யத் தொடங்கின. அதே நேரத்தில் மஹிந்தரா மற்றும் டாடா போன்ற இந்திய கார் நிறுவனங்களும் வளரத்தொடங்கின.

இந்நிலையில், 72-வது சுதந்திர தின விழாவான இன்று, இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் வரலாற்றை மாற்றியமைத்த 5 முக்கிய கார்களை பற்றி பார்ப்போம்:

மாருதி 800
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு-1983
Loading...
மாருதி 800 காரை போல் இந்திய சந்தையில் தாக்கம் ஏற்படுத்திய கார் வேறெதுவும் இல்லை. 30 வருடம் ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுவந்த மாருதி 800 காரை இந்திய அரசு ஜப்பானிய நிறுவனமான சுஸுகியுடன் இணைந்து கொண்டுவந்தது. ஜப்பானில் சுஸுகி எஸ்.எஸ் என்ற காரையே இங்கு மாருதி சுஸுகி என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

2005-ம் ஆண்டு மாருதி சுஸுகி 800 காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. பின்பு மாருதி சுஸுகி நிறுவனம், அதே காரின் மாடலில் ஆல்டோ காரை அறிமுகப்படுத்தியது.

ஹிந்துஸ்தான் அம்பாசெடர்
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு-1958


மாருதி 800 காருக்கு பிறகு, இந்திய ஆட்டோமொபைல் நிறுவனத்தின் முகமாக மாறிப்போனது ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் அம்பாசெடர் கார். இந்தியாவில் அசெம்பில் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்த முதல் கார் அம்பாசெடர்தான். பார்ப்பதற்கு பெரிதாக, பிரமாண்டமாக இருந்த அம்பாசெடர் இந்திய அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகளின் ஆஸ்தான காராக மாறிப்போனது.

ஒரு கட்டத்தில் அம்பாசெடர் கார் என்பது மிகப்பெரிய ஸ்டேட்டஸ் சிம்பளாக கருதப்பட்டது. மற்ற வெளிநாட்டுக் கார்களின் வருகையால் அம்பாசெடரின் விற்பனை சரியத் தொடங்கியதால் 2014-ம் ஆண்டு இந்த காரின் தயாரிப்பை ஹிந்துஸ்தான் நிறுவனம் நிறுத்திக்கொண்டது.

ஹூண்டாய் சான்ட்ரோ
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு-1997

என்னதான் தற்போது ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய ஆட்டமொபைல் சந்தையில் 2-ம் இடத்தில் இருந்தாலும், ஹுண்டாய் என்ற தென்கொரிய நிறுவனம் முதன் முதலில் சேண்ட்ரோ என்ற காரை அறிமுகப்படுத்தியபோது அதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மாருதி 800-க்கும் , டாடா இண்டிகோவுக்கும் போட்டியாகக் களமிறக்கப்பட்ட சான்ட்ரோ அதிக கேபின் ஸ்பேஸ், நல்ல இன்ஜின் மற்றும் சிறப்பான ஹேண்ட்லிங் காரணமாக வாடிக்கையாளர்களில் ஃபேவரைட் லிஸ்டில் வெகு சீக்கிரம் இடம் பிடித்துவிட்டது.

ஹூண்டாய் ஐ-10 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக சாண்ட்ரோ காரின் தயாரிப்பை 2014-ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனம் நிறுத்திக்கொண்டது.

மஹிந்திரா ஸ்கார்பியோ
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு-2002

பெரிய எஸ்.யு.வி வகை கார்கள் என்பது பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையை மஹிந்திரா ஸ்கார்பியோ மாற்றி அமைத்தது. ராயலான லுக்குடன் பெரிய வகை எஸ்.யு.வி வகை காரான மஹேந்திரா ஸ்கார்பியோ குறைந்த பட்ஜெட்டில் அடங்கக்கூடியதாக இருந்ததால் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக பந்தாவாக ஊருக்குள் வலம் வர அரசியல்வாதிகள் ஸ்கார்ப்பியோவை வாங்கத் தொடங்கினர். டாட்டா ஸ்ஃபாரிக்கு பிறகு இன்றும் அரசியல்வாதிகள் விரும்பி வாங்கும் ஒரு கார் என்றால் அது ஸ்கார்ப்பியோதான்.


ஹோண்டா சிட்டி
அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு-1998


இந்தியாவில் அதிகம் விற்கப்படும் பிரீமியம் கார்களில் ஹோண்டா சிட்டியும் ஒன்று. ஆனால் 1998-ம் ஆண்டு இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டபோது அவ்வளவு பெரிய வரவேற்பை பெறவில்லை. பின்பு ஹோண்டா நிறுவனம் இந்த காரினுடைய டிசைனில் தொடர்ந்து பல அப்டேட்களை கொண்டு வந்தது.

இன்றும் ஹோண்டா சிட்டியின் 1998 மாடலுடைய டிசைன்தான், இதுவரை வந்த மாடல்களிலேயே சிறந்தது என்பது பல பேருடைய எண்ணம். இந்தியாவில் முதன் முதலில் டீசல் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தப்பட்ட கார் ஹோண்டா சிட்டிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...