பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க நிறுவனங்கள் தீவிரம்

Web Desk | news18
Updated: October 15, 2018, 11:09 PM IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி: எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க நிறுவனங்கள் தீவிரம்
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: October 15, 2018, 11:09 PM IST
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்திய மற்றும் சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்கள் ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளன.

மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வரும் நிலை மாறி இப்போது தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இவற்றின் விலை ஏறிக்கொண்டுதான் இருக்கிறது. விலை ஏற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பாதிக்கப்படுவது என்னவோ வாடிக்கையாளர்கள் தான்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் வாகன கடன்களுக்கான வட்டியும் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் புதிய கொள்கையின்படி வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் வாகன விற்பனையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதை சரிக்கட்ட இந்திய மற்றும் சர்வதேச கார் உற்பத்தியாளர்கள் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டியுள்ளன. அதன் அடிப்படையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி, மஹிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் இறங்கியுள்ளன.

சீனாவை தலைமையிடமாக கொண்ட எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கென்றே பிரத்யேக எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் சுமார் 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. எஸ்யூவி ரக கார்களை வரும் 2020-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

அது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக, குஜராத்தில் ஹாலோல் நகரத்தில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. இ ஆர்எக்ஸ் 5 (e RX 5) என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த கார்களின் தயாரிப்புப் பணிகள் 2019-ல் தொடங்க உள்ளதாகவும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Loading...

இந்தக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 425 கிலோ மீட்டர் வரை செல்லும் என்றும், இந்திய வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ற வகையில் விலை இருக்கும் என்றும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியில் இ ஆர்எக்ஸ் 5 காரின் மாதிரியை எம்ஜி நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்ததை பிரதமர் மோடி பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...