டெல்லியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான பொதுமக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. அங்கு முன்பை விட அதிகமான எலக்ட்ரிக் வாகனங்கள் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மின்சாரத்தில் இயங்கும் பைக் மற்றும் கார்கள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மற்றும் வாகனங்களை மெயின்டனன்ஸ் செய்வதற்கான செலவு உள்ளிட்டவை மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை நாடுவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கடந்த ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை பதிவான ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் 7% வாகனங்கள் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். 6% சிஎன்ஜி எனப்படும் கியாஸில் இயங்கும் வாகனங்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.
Also read:
பெட்ரோல், டீசல் விலையில் கூடுதலாக 7 ரூபாய் குறைத்த கர்நாடகா, புதுவை அரசுகள்!
ஒருபக்கம் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தாலும், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கான மவுசு குறையவில்லை. ஜூலை முதல் செப்டம்பர் 2021 வரை, டெல்லியில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 7,869 மின்சார வாகனங்கள். 6,857 சிஎன்ஜி வாகனங்கள். 7,257 சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் இரண்டிலும் இயக்கப்படும் வாகனங்கள். 93,091 வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படுபவை.
எரிபொருளை மிச்சப்படுத்துவதால் ஓரளவு பணத்தை சேமிக்க முடியும் என்றாலும், எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் சில சிக்கல்கள் உள்ளன. பெட்ரோல் டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகம். இதேபோன்று, பெட்ரோல் டீசல் வாகனங்களை செகண்ட் ஹேண்டில் குறைந்த விலைக்கு வாங்க முடியும்.
Also read:
ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…
முழுமையாக சார்ஜ் செய்தாலும் ஒரு சார்ஜிங்கில் நீண்ட தூர பயணம் செல்ல முடியாது. பெட்ரோல் பல்க்குகளைப் போன்று, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கு அதிகப்படியான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவில்லை. இந்த சிக்கல்கள் சரி செய்யப்படும்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடும் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.