எத்தனையோ கார் தயாரிப்பு நிறுவனங்கள் இருந்தாலும் இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி மற்றும் ஹூணடாய் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் புதிய புதிய மாடலில் கார்களை தயாரித்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய மாடல்களை அறிமுகம் இரண்டு நிறுவனங்களுமே தயாராக உள்ளன.
வரும் ஜனவரி 13 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் இந்தியாவின் 16 ஆவது கார் எக்ஸ்போ நடைபெற உள்ளது. இந்த கார் எக்ஸ்போவில் புதிய மாடல் கார்கள்அ அறிமுகமாக உள்ளன. அதற்காக மாருதி சுசுகி நிறுவனமும், ஹூண்டாய் நிறுவனமும் புதிய மாடல்களுடன் தயாராக உள்ளன.
முதலில் மாருதி சுசுகி என்ன மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது என்பதை பார்க்கலாம்…
மாருதி சுசுகி 2023 –கார் எக்ஸ்போவில் இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய மாடலில் ஒன்று பெலினோ வேரியனட்டில் வெளியாக உள்ளது. ஏற்கனே உள்ள பெலினோவில் ஸ்போர்ட்ஸ் ரக மாடலாக புதிய மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. டர்போ பெட்ரோலில் இயங்கக் கூடிய வகையில் எஞ்சின் கட்டமைக்கப்பட்டுள்ளதோடு, மிகவும் ஸ்டைலான வெளிப்புற வடிவமைப்பை கொண்டுள்ளது இந்த புதிய மாடல். அதோடு, கடந்த எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் 3 கதவுகளை கொண்ட ஜிம்மி ரக கார்களை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் 5 கதவுகளுடன் கூடிய புதிய ஜிம்மி மாடல் காரை அறிமுகம் செய்ய உள்ளது மாருதி சுசுகி.
Read More : ADAS தொழில்நுட்பம் கொண்ட விலை குறைவான கார்களின் பட்டியல் இதோ..!
இதே போல் ஹண்டாய் நிறுவனமும் புதிய மாடல் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. புதிய எலக்ட்ரிக் எக்ஸ்யுவி காரை லோனிக்-5 என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லோனிக்-5 எலக்ட்ரிக் எக்ஸ்யுவி கார் முற்றிலும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதாகும். அதே போல் செடான் டைப் காரான வெர்னாவும் எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட உள்ளது. நேர்த்தியான, நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த இரண்டு ரக கார்களும் தயரிக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ள கார் எக்ஸ்போவில் வழக்கம் போல மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தங்களின் புதிய மாமடல் கார்களை அறிமுகம் செய்ய காத்திருக்கின்றன. புதிய மாடல் கார்களின் மாதிரி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இப்போது கார் பிரியர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளன. புதிய வரவுக்காக கார் பிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். மற்ற சில கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களின் புதிய மாடல்களை அறிமுகம் செய்யலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.