முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ஸ்டாண்ட் போட தேவை இல்ல... ஆட்டோ மாதிரி ஓடும்.. ஆனா இது ஸ்கூட்டர்!

ஸ்டாண்ட் போட தேவை இல்ல... ஆட்டோ மாதிரி ஓடும்.. ஆனா இது ஸ்கூட்டர்!

BeiGo X4 

BeiGo X4 

பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஐ-கோவைஸ் மொபைலிட்டி (iGowise Mobility) ஒருவகை புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சைக்கிள், ஸ்கூட்டி என்று எதை ஓடினாலும் பேலன்ஸ் என்பது முக்கியம். சமமாக  எடை இல்லாவிட்டால் ஒரு பக்கமாக சாய்ந்து விடும். பொருட்கள் மாட்டிக்கொண்டு வண்டி நிறுத்தும்போது ஸ்டாண்ட் சரியாக போட்டோமா வண்டி சார்ந்துவிடுமோ, பொருட்கள் கீழே விழுந்துவிடுமோ என்ற எண்ணம் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும்.

ஒரு சிலருக்கு ட்ராபிக்கில் நிற்கும்போது காலை இரண்டுபுறமும் ஊன்றி நிற்கமுடியாமல் சிரமப்படுவர். அவர்கள் எல்லாருக்கும் ஒரு நல்ல செய்தி காத்துகொண்டு இருக்கிறது. தானாக பேலன்ஸ் செய்துகொண்டு, ஆட்டோ போலவே ஓடும் ஒரு ஸ்கூட்டி சந்தைக்கு வர தயாராகிக்கொண்டு இருக்கிறது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட EV ஸ்டார்ட்அப் iGowise Mobility ஆனது BeiGo X4 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஜனவரி 26, 2023 அன்று இந்திய சந்தையில் வெளியிட்டது. 150 கிமீ ரேஞ்ச் கொண்ட  BeiGo X4  ஸ்கூட்டர் நெருப்பால் பாதிப்படையாத லைஃப் பி.ஒ4 பேட்டரி,  பில்லியன் ஃபுட்ரெஸ்ட், மற்றும் டிரிபிள் டிஸ்க் ஆன்டி-ஸ்கிட் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை உள்ளன. அதோடு  இருக்கைகளுக்கு அடியில் சுமார் 60 லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இடவசதியும் உள்ளது.

இதையும் படிங்க: தோஸ்த் படா தோஸ்த்.. ஜாலி டூர்-க்கு சூப்பர் வண்டி - எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அசோக் லேலண்ட்

BeiGo X4 ஆனது, தேவைக்கேற்ப சுய சமநிலையை எளிதாக்கும் இரட்டைச் சக்கர ஒருங்கிணைந்த ஆற்றல்-ரயில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலில், சரிவுகளிலும், பின்னோக்கிச் செல்லும்போதும் கால்களை கீழே ஊன்ற அவசியம் இல்லை . இந்த தொழிற்நுட்பம் ஸ்கூட்டரை எந்தவொரு பிடிமானமும் இன்றி தன்னிச்சையாக நிற்க வைக்கிறது.

செல்ஃப்-பேலன்ஸ் இருப்பதால், பெய்கோ எக்ஸ்4 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணிக்கும்போது நீங்கள் ஃபுட்போர்டில் இருந்து கால்களை வெளியே எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது எனவும், ஏறுமுகமான சாலையில் ஏறும்போதும், ரிவர்ஸில் வரும்போது கூட கால்களை சாலையில் வைக்காமல் பயணிக்கலாம் எனவும் ஐ-கோவைஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. அதேபோல வண்டியை நிறுத்தும் போது ஸ்டாண்டை தேடவேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல பின்பக்கம் 2 சக்கரங்கள் இருப்பதால் சீட் அளவும் பெரிதாக உள்ளது. உக்காருவதற்கு எந்த சிரமமும் இருக்காது. அதேபோல ஓட்டுநர் தனது கால்களை வைத்துக்கொள்ள விசாலமான பிளாட் ஃப்ளோர் லெக்ரூம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் சரியான விற்பனை விலையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. தோராயமாக இதன் அறிமுக விலை ரூ.1.1 லட்சம் வரை இருக்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்க்கு 5-வருட/1 லட்ச கிமீ பயணத்திற்கான உத்தரவாதத்தை வாடிக்கையாளர்களுக்கு ஐ-கோவைஸ் மொபைலிட்டி வழங்கவுள்ளது. மேலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எளிமையாக வாங்க வசதியாக பூஜ்ஜிய-டவுன்-பேமண்ட் மாத சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

First published:

Tags: Electric bike, Scooters