நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ‘பார்க்’ செய்கிறீர்களா? பறிமுதல் செய்யப்படும் என NHAI எச்சரிக்கை

வாகனப் பறிமுதல், ஏலம், அபராத வசூல் ஆகிய பணிகளைக் கவனிக்க சிறப்புக் குழுக்களும் தயாராகி வருகின்றன.

நெடுஞ்சாலைகளில் வாகனத்தை ‘பார்க்’ செய்கிறீர்களா? பறிமுதல் செய்யப்படும் என NHAI எச்சரிக்கை
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 30, 2019, 7:21 PM IST
  • Share this:
தேசிய நெடுஞ்சாலைகளில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் வாகனத்தை நிறுத்தினால் நெடுஞ்சாலைத்துறை வாகனத்தை பறிமுதல் செய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளில் சட்ட விரோதமாக வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட உள்ளது. அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வார காலத்திலேயே பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் விடப்பட்டு ஏலத்தொகை வசூல் செய்யப்படும் என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகள் தொடர்பான அனைத்து முடிவுகளுமே நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சட்டப்பிரிவு 24, 26, 27, 30, 33, 36, 37 மற்றும் 43 ஆகியவற்றின் கீழ் நெடுஞ்சாலை குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளும் அபராதங்களும் விதிக்கப்பட உள்ளன.


வாகனப் பறிமுதல், ஏலம், அபராத வசூல் ஆகிய பணிகளைக் கவனிக்க சிறப்புக் குழுக்களும் தயாராகி வருகின்றன. நெடுஞ்சாலை போக்குவரத்து விதி, பார்க்கிங், ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பேனர் விளம்பரங்கள் என அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: 35 நாட்களில் 40 ஆயிரம் பேர் முன்பதிவு... வரலாறு காணாத சாதனையைப் படைத்த கியா செல்டாஸ்!

108 ஆம்புலன்ஸ் சேவையை முறைகேடாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள்
First published: September 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்