Home /News /automobile /

புதிய டிசைன், எஞ்சின் உடன் புத்துயிர் பெறும் அம்பாசிடர்... 2.0 மாடல் எப்போது அறிமுகம்?

புதிய டிசைன், எஞ்சின் உடன் புத்துயிர் பெறும் அம்பாசிடர்... 2.0 மாடல் எப்போது அறிமுகம்?

மாதிரி படம்

மாதிரி படம்

Ambassador Car | எச்எம் நிறுவனத்தின் அம்பாசிடர் மாடல் ஆனது பிரிட்டிஷ் கார் மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ் III ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் 1957 இல் அறிமுகமானது. வெளியான வேகத்திலேயே இந்த ஐகானிக் கார் ஒரு ஸ்ட்டஸ் சிம்பிள் ஆக உருமாறியது மற்றும் பல தசாப்தங்களாக சிறப்பாக விற்பனை ஆகும் கார்களில் ஒன்றாகவும் இருந்தது.

மேலும் படிக்கவும் ...
பல தசாப்தங்களாக இந்திய ஆட்டோமொபைல் துறையின் ஐகானிக் சின்னமாக விளங்கும் மற்றும் மிக உன்னதமான இந்திய கார்களில் ஒன்றான ஹிந்துஸ்தான் மோட்டரின் 'அம்பாசிடர்' புதிய அவதாரத்தில் வெளியிடப்பட உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஐகானிக் கார் 2014 இல் நிறுத்தப்பட்டது, அதற்கு வாடிக்கையாளர்களின் தேவை குறைந்து விட்டதாகவும் மற்றும் கடன் அதிகமாகி விட்டதாகவும் காரணம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் ​​​​அம்பாசிடர் 2.0 மாடல் ஆனது அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் வெளியிடப்படும் என்கிற தகவல் கிடைத்து உள்ளது.

ஹிந்த் மோட்டார் பைனான்சியல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Hind Motor Financial Corporation of India - HMFCI) ஆனது இந்த கிளாசிக் காரை அப்டேட் செய்ய பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோவுடன் (Peugeot) கை கோர்த்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் கீழ் இவ்விரு நிறுவனங்களும் அம்பாசிடர் 2.0 மாடலின் வடிவமைப்பு மற்றும் எஞ்சினில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த தலைமுறை அம்பாசிடர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் சென்னை ஆலையில் தயாரிக்கப்படும். இது சிகே பிர்லா குழுமத்தின் இணை நிறுவனமான எச்எம்எப்சிஐ (HMFCI) இன் கீழ் இயங்குகிறது.

புதிய காரில் பணிபுரிவது பற்றி எச்எம் இயக்குனர் உத்தம் போஸ் பேசுகையில், 'ஆம்பி' இன் புதிய தோற்றத்தை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து உள்ளார். மேலும் வரும் ஆண்டுகளில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் சுட்டிக்காட்டிய இயக்குனர், காரின் மெக்கானிக்கல் மற்றும் டிசைன் வேலைகள் மேம்பட்ட கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.



அறியாதோருக்கு எச்எம் நிறுவனத்தின் அம்பாசிடர் மாடல் ஆனது பிரிட்டிஷ் கார் மோரிஸ் ஆக்ஸ்போர்டு சீரிஸ் III ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் 1957 இல் அறிமுகமானது. வெளியான வேகத்திலேயே இந்த ஐகானிக் கார் ஒரு ஸ்ட்டஸ் சிம்பிள் ஆக உருமாறியது மற்றும் பல தசாப்தங்களாக சிறப்பாக விற்பனை ஆகும் கார்களில் ஒன்றாகவும் இருந்தது. இருப்பினும், 57 வருட உற்பத்திக்குப் பிறகு, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் காரின் தயாரிப்பை கடந்த 2014 ஆம் ஆண்டில் நிறுத்தி கொண்டது. இந்நிறுவனம் தன் ஆலையை மூடுவதற்கு முன்பு, மேற்கு வங்க மாநிலம் உத்தரபராவில் உள்ள எச்எம் தொழிற்சாலையிலிருந்து கடைசியாக அம்பாசிடர் கார் வெளியேறியது. அந்த நேரத்தில் இந்நிறுவனம் பெரும் கடனைக் கையாள்வதாகவும், அம்பாசிடருக்கான தேவை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.

Also Read : குறைந்த பட்ஜெட் விலையில் வாங்க கூடிய டாப் 5 ஸ்கூட்டர்கள்

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2017 ஆம் ஆண்டில், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பியூஜியாட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து அம்பாசிடர் காரை குறிப்பிட்ட பிரெஞ்சு வாகன உற்பத்தியாளருக்கு விற்றது. சிகே பிர்லா குழுமம், 1990 களின் மத்தியில் இந்திய சந்தையில் நுழைந்த முதல் வெளிநாட்டு வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான பியூகோட்டிற்கு அம்பாசிடர் பிராண்டை ரூ.80 கோடிக்கு விற்றது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile

அடுத்த செய்தி