60 நாளில் 50ஆயிரம் பேர் முன்பதிவு... ஹூண்டாய் வென்யூவுக்கு குவியும் ஆதரவு!

வருங்காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப அப்டேட், இடவசதி, சொகுசு, பாதுகாப்பு என அனைத்திலும் நியூ ஜென் அப்டேட்களைப் பெற்றுள்ளது வென்யூ.

60 நாளில் 50ஆயிரம் பேர் முன்பதிவு... ஹூண்டாய் வென்யூவுக்கு குவியும் ஆதரவு!
ஹூண்டாய்
  • News18
  • Last Updated: July 30, 2019, 7:46 PM IST
  • Share this:
ஹூண்டாய் வென்யூ அறிமுகமான 60 நாளிலேயே 50ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளது அந்தக் காருக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ‘கனெக்டட் கார்’ என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஹூண்டாய் வென்யூ. ’கனெக்டட் கார்’ என்றால் இணைய சேவை உள்ளிட்ட முற்றிலும் ஹைடெக் தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். ஹூண்டாய் தயாரிப்புகளிலேயே அதிகப்படியான வரவேற்பு வென்யூவுக்குக் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் விற்பனைப் பிரிவுத் தலைவர் விகாஸ் ஜெயின் கூறுகையில், “வருங்காலத்துக்கு ஏற்ற தொழில்நுட்ப அப்டேட், இடவசதி, சொகுசு, பாதுகாப்பு என அனைத்திலும் நியூ ஜென் அப்டேட்களைப் பெற்றுள்ளது வென்யூ. வென்யூவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு எங்களைத் திகைக்கவைத்துள்ளது.


ப்ளூ இங்க் தொழில்நுட்பத்துக்கு (ஸ்மார்ட் காராக முன்னிறுத்தும் தொழில்நுட்பம்) இந்திய வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆதரவு அளிக்கின்றனர். வென்யூ காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுள் 35 சதவிகிதத்தினர் இந்த் ப்ளூ இங்க் தொழில்நுட்பத்தின் காரணமாகவே வென்யூவைத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்” என்றார்.

Also see:

First published: July 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்