எரிபொருள் செல் மின் வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது.
இந்தியாவில் பசுமை வாகனங்களுக்கான வரவேற்பு மிகவும் நன்றாகவே உள்ளது. இதனால் கார் உற்பத்தி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன.ஹூண்டாய் நிறுவனம் சார்பில் இந்தியாவில் ஏற்கெனவே சிறப்பான விற்பனையை கோனா எலெக்ட்ரிக் வாகனம் பெற்று வருகிறது.
இதற்கு அடுத்ததாக எலெக்ட்ரிக் வாகனங்களிலேயே இன்னும் தரமான எரிபொருள் செல் வாகனங்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஹூண்டாய் ஈடுபடத் தொடங்கியுள்ளது. எரிபொருள் செல் எலெக்ட்ரிக் வாகனம் என்பது ஒரு வகையான வேதியல் செயல்பாட்டால் உருவாகும் ஆற்றலின் மூலம் இயங்கும் வாகனம் ஆகும்.
ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இடையே நடைபெறும் ஒரு வகை வேதியல் மாற்றத்தால் உருவாகும் ஆற்றல் மின் சக்தியாக மாற்றப்பட்டு வாகனத்தை இயங்க வைக்கும். வாகன மாசுபாட்டைக் குறைக்க எரிபொருள் செல் வாகனங்கள் மிகவும் உதவும். இதனாலே இந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் களம் இறக்க உள்ளது ஹூண்டாய்.
இத்தகைய நுட்பத்துடன் ஹூண்டாய் நெக்ஸோ எஸ்யூவி கார் சமீபத்தில் கொரியாவில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: ஒரே மாதத்தில் சுமார் 14 ஆயிரம் கார்கள் விற்பனை... சூடுகாட்டிய கியா செல்டாஸ்! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.