5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களைக் களம் இறக்கத் தயார்- ஹூண்டாய் அறிவிப்பு!

ஹூண்டாய்

எதிர்பாரா வளர்ச்சியைப் பெற்றுள்ள ஹூண்டாய் நிறுவனம், இந்திய சந்தையில் முதலிடத்தை எட்டி வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருகிற 2025-ம் ஆண்டுக்குள் சுமார் 5 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை சந்தைப் படுத்தத் தயாராகி வருவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் வெளியாகும் எனத் தெரிகிறது. சர்வதேச அளவில் 5-வது மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது ஹூண்டாய்.

2025-ம் ஆண்டுக்குள் மொத்தம் 16 ரக எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. வோக்ஸ்வேகன் நிறுவனமும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 22 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனைக்குக் கொண்டு வருவதாக உறுதி எடுத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஆனால், எதிர்பாரா வளர்ச்சியைப் பெற்றுள்ள ஹூண்டாய் நிறுவனம், இந்திய சந்தையில் முதலிடத்தை எட்டி வருகிறது.

மேலும் பார்க்க: மூன்று மாதத்துக்கு ஒரு புது மாடல்... இந்திய சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் Audi..!

விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி
Published by:Rahini M
First published: