Home /News /automobile /

அசத்தல் அப்டேட் உடன் ஹூண்டாய் சான்ட்ரோ- ஆண்டு விழா சிறப்பு வெளியீடு!

அசத்தல் அப்டேட் உடன் ஹூண்டாய் சான்ட்ரோ- ஆண்டு விழா சிறப்பு வெளியீடு!

ஹூண்டாய் சான்ட்ரோ

ஹூண்டாய் சான்ட்ரோ

ஸ்போர்ட்ஸ் MT மற்றும் AMT ஆகிய இரண்டு ரகங்களில் இரண்டு நிறத் தோற்றத்துடன் வெளியாகி உள்ளது.

  • News18
  • Last Updated :
ஹூண்டாய் சான்ட்ரோ காரின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்புப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹூண்டாய் க்ராண்ட் i10 நியாஸ் காரை அடிப்படையாகக் கொண்டு சான்ட்ரோ சிறப்பு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்போர்ட்ஸ் MT மற்றும் AMT ஆகிய இரண்டு ரகங்களில் இரண்டு நிறத் தோற்றத்துடன் வெளியாகி உள்ளது. ஸ்போர்ட்ஸ் MT ரகத்தின் விலை 5,16,890 ரூபாய்க்கும் ஸ்போர்ட்ஸ் AMT 5,74,890 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்டு விழா சிறப்பு பதிப்பு குறித்து ஹூண்டாய் தேசிய விற்பனைப் பிரிவு அதிகாரி விகாஸ் ஜெயின் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் சான்ட்ரோ ஆண்டு விழா பதிப்பு அப்டேட் செய்யப்பட்ட அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உலகத் தரம் வாய்ந்த அம்சங்கள் கொண்டதாக சான்ட்ரோ உள்ளது” என்றார்.

மேற்கூரை, உட்புற வடிவமைப்பு, கார் நிறத் தோற்றம் ஆகியவற்றில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இந்தியாவின் முதல் இன்டெர்நெட் காருக்கு புதியதொரு அப்டேட்..!

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம் - முழு விவரம்
Published by:Rahini M
First published:

Tags: Hyundai Santro

அடுத்த செய்தி