Home /News /automobile /

2030-க்குள் 79.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய Hyundai நிறுவனம் திட்டம் - எலெக்ட்ரிக் வாகன துறைக்கு முன்னுரிமை

2030-க்குள் 79.2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய Hyundai நிறுவனம் திட்டம் - எலெக்ட்ரிக் வாகன துறைக்கு முன்னுரிமை

hyundai

hyundai

Hyundai | தற்போது வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் 79.21 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகளை செய்ய திட்டமிட்டிருப்பதாக Hyundai நிறுவனம் அறிவித்துள்ளது. தென் கொரியாவை சேர்ந்த இந்த நிறுவனம், அந்நாட்டு கரன்ஸி மதிப்பு அடிப்படையில் 95.5 டிரில்லியன் வான்களை முதலீடுகள் செய்ய இருப்பதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி துறையில் 19.4 டிரில்லியன் வான் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள், எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ந்த உலகின் மொத்த முதலீடுகளில் 8 முதல் 10 சதவீத அளவு தங்களிடம் இருக்க வேண்டும் என்று ஹூண்டாய் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் உற்பத்தித் துறையில் தனது இலக்குகளை அடைய மிக துரிதமான வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த துறை சார்ந்த உற்பத்தியை விரிவாக்கம் செய்ய் பல்வேறு வழிமுறைகளை முயற்சித்து வருகிறது.

மீண்டும் ஜப்பானில் முதலீடு

ஜப்பான் நாட்டில் மீண்டும் முதலீடு செய்ய தங்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று ஹூண்டாய் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த முறை அங்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆன்லைன் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.



உலகெங்கிலும் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய திட்டம்

தற்போது வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜேஹூன் சாங் கூறுகையில், “ஜப்பான் சந்தைக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை பெருக்குவதில் கவனமுடன் செயல்பட்டு வருகிறோம். இது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் 2026 ஆம் ஆண்டுக்குள் 1.7 மில்லியன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். எங்கள் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான கியா மற்றும் ஜெனீசிஸ் ஆகியவையும் இந்த விற்பனை இலக்கில் இடம்பெறும்’’ என்று தெரிவித்தார்.

Also Read : கார் இன்சூரன்ஸ் பீரியமத்தில் தள்ளுபடி வேண்டுமா?

ஒவ்வொரு பிராண்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள்

ஹூண்டாய் நிறுவனம் வேறு பல பிராண்ட் பெயர்களிலும் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. அந்த பிராண்டுகளின் பெயர்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா EV6 மற்றும் ஜெனீசிஸ் VV60 ஆகியவை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டன.

Also Read : போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகையில் டிஸ்கவுண்ட் வழங்கும் காவல்துறை - என்ன காரணம்னு தெரிஞ்சுகோங்க

கடந்த ஆண்டில் உலக அளவில் 4 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், 3.89 மில்லியன் வாகனங்கள் விற்பனையாகின. அதை ஒப்பீடு செய்து, இந்த ஆண்டு 4.32 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Electric Cars, Hyundai

அடுத்த செய்தி