ஹூண்டாய் கார்களுக்கு ₹ 2.65 லட்சம் வரையில் ஆஃபர்..!

ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு 2.4 லட்சம் ரூபாய் தள்ளுபடி உள்ளது.

ஹூண்டாய் கார்களுக்கு ₹ 2.65 லட்சம் வரையில் ஆஃபர்..!
க்ராண்ட் i10
  • News18
  • Last Updated: November 18, 2019, 5:36 PM IST
  • Share this:
விற்பனையை அதிகரிக்க குறிப்பிட்ட சில கார்களுக்கு 2.65 லட்சம் ரூபாய் வரையில் ஆஃபர் அளிப்பதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிப் பாதையில் பயணித்ததால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். ஹூண்டாய் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில மாடல்களுக்கு 2.65 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி தருகிறது.

டஸ்கான், எலான்ட்ரா, க்ராண்ட் i10, வெர்னா, i20, சான்ட்ரோ, i20 ஆக்டிவ் ஆகிய கார்களுக்கு தள்ளுபடி உள்ளது. நவம்பர் மாதம் கார் வாங்குவோருக்கு மட்டுமே இந்த சலுகைகள் பொருந்தும். ஹூண்டாய் டஸ்கான் காருக்கு 2.65 லட்சம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. இதனுடன் எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்ரேட் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.


ஹூண்டாய் எலான்ட்ரா காருக்கு 2.4 லட்சம் ரூபாய் தள்ளுபடி உள்ளது. சந்தையில் ஹோண்டா சிவிக், ஸ்கோடா ஆக்டேவியா ஆகிய கார்களுக்குப் போட்டியாக உள்ள எலான்ட்ரா காருக்கு மிகுந்த வரவேற்பும் உள்ளது. க்ராண்ட் i10 காருக்கு 85 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உள்ளது.

வெர்னா, எலிட் i20 ஆகிய இரண்டு கார்களுக்கும் 80 ஆயிரம் ரூபாயும் சான்ட்ரோவுக்கு 70 ஆயிரம் ரூபாய், i20 ஆக்டிவ் 40 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி உள்ளது.

மேலும் பார்க்க: சென்சார் உடன் கனெக்டட் ஆன உலகின் முதல் 5ஜி டயர்..!
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading