ரூ.1.5 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி அறிவித்துள்ள ஹூண்டாய் நிறுவனம்!

ஹூண்டாய்

பல முன்னணி கார் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டிருந்த பல வாகன வெளியீடுகளை ஒத்தி வைத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் பல மாநிலங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கடந்த ஆண்டை விட அதிக பாதிப்புகளை கொரோனா இரண்டாம் அலை ஏற்படுத்தி வருவதால் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியில் சில வாரங்களாக கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. தொற்று பரவல் காரணமாக பல முன்னணி கார் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டிருந்த பல வாகன வெளியீடுகளை ஒத்தி வைத்துள்ளனர். பலருக்கும் பொருளாதார நெருக்கடியான சூழல் இது என்றாலும் கார் வாங்க விரும்புவோருக்கு இது மகிழ்ச்சியான காலமாக அமைய கூடும்.

ஏனென்றால் நெருக்கடியான இந்த சூழலில் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க பல கார் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் தனது சில மாடல் கார்களுக்கு அதிகபட்சம் ரூ .1.5 லட்சம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் அதன் பிரபலமான மாடல்களான ஹூண்டாய் சாண்ட்ரோ (Hyundai Santro), ஹூண்டாய் ஆரா (Hyundai Aura) , ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் (Hyundai Grand i10 Nios) , ஹூண்டாய் ஐ 20 (Hyundai i20) மற்றும் ஹூண்டாய் கோனா இ.வி (Hyundai Kona EV) உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மே மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஹூண்டாய் வழங்கும் தள்ளுபடியில் கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் (cash discounts), எக்ஸ்சேஞ்ச் போனஸ் (exchange bonuses) மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட்ஸ் (corporate discounts) உள்ளிட்டவைகள் அடங்கும்.

Also read... கோவிட் -19 தொற்று காரணமாக பராமரிப்பு பணிநிறுத்தத்தை மேலும் நீடித்த மாருதி சுசுகி!

ஹூண்டாய் சாண்ட்ரோ (Hyundai Santro):

ஹூண்டாய் சாண்ட்ரோ காரானது இந்திய வாடிக்கையாளர்களுக்காக நீண்ட வருடங்களாக ஹூண்டாய் நிறுவனம் வழங்கி வரும் ஹேட்ச்பேக் மாடல்களில் ஒன்றாகும். கடந்த 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை சாண்ட்ரோவுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ .20,000 வரை கேஷ் டிஸ்கவுன்ட் மற்றும் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ .5,000 ஆகியவை அடங்கும். கூடுதலாக ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் பெறலாம்.

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 NIOS):

ஹூண்டாயின் ஸ்டைலான ஹேட்ச்பேக் மாடலான கிராண்ட் ஐ 10 நியோஸ் காருக்கு அதிகபட்சம் ரூ .45,000 வரை சலுகைகள் வழங்கப்படுகிறது. கேஷ் டிஸ்கவுன்ட் ரூ .30,000, கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ .5,000 வரையும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.10,000 தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஹூண்டாய் ஆரா (Hyundai Aura):

ஹூண்டாய் ஆரா மாடல் காருக்கும் அதிகபட்சம் ரூ.45,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஷ் டிஸ்கவுன்ட் ரூ .30,000, கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ .5,000 வரையும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ.10,000 தள்ளுபடியை பெறலாம்.

ஹூண்டாய் ஐ 20 (Hyundai i20):

ஹூண்டாய் ஐ20 கார் மாடலுக்கு கேஷ் டிஸ்கவுன்ட் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த மாடல் கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.5,000, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 என மொத்தம் ரூ.15,000 சிறப்பு தள்ளுபடியை கொண்டுள்ளது. இதன் iMT Turbo versions கூடுதல் கட்டணம் இல்லாமல் ரூ .12,999 மதிப்புடைய எக்ஸ்ட்ரா 5 ஆண்டு / 60,000 கி.மீ உத்தரவாதம் கொண்டுள்ளது.

ஹூண்டாய் கோனா இ.வி (Hyundai Kona EV):

ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் வாகனத்திற்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் கேஷ் டிஸ்கவுன்ட்டை அறிவித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். கோனா இ.வி கார் வாங்கும் வாடிக்கையாளருக்கு இந்த மிக பெரிய சிறப்பு தள்ளுபடியை தவிர வேறு எந்த நன்மைகளையும் நிறுவனம் வழங்காது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: