அசாம் வெள்ள நிவாரணத்துக்காக ₹1 கோடி நிவாரண நிதியளித்த ஹூண்டாய்!

வாகன பராமரிப்பும் சேவையும் அசாம் மற்றும் பிஹார் மாநில வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: July 31, 2019, 6:57 PM IST
அசாம் வெள்ள நிவாரணத்துக்காக ₹1 கோடி நிவாரண நிதியளித்த ஹூண்டாய்!
ஹூண்டாய் (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: July 31, 2019, 6:57 PM IST
அசாம் வெள்ள நிவாரண நிதி உதவியாக ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 1 கோடி ரூபாயை முதல்வரின் வெள்ள நிவாரண நிதியின் கீழ் வழங்கியுள்ளது.

அசாம் முதல்வர் ஸ்ரீசர்பநந்தா சோனாவாலை, ஹூண்டாய் மோட்டார்ஸ் துணைத் தலைவர் ஸ்டீஃபன் சுதாகர், ட்ரஸ்டி பெதாப்ரதா சர்மா உள்ளிட்ட முக்கிய மூத்தத் தலைவர்கள் சந்தித்து நிவாரண நிதிக்கான காசோலையை அளித்தனர்.

அசாம் மாநிலம் முழுமையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்கள் பலவும் அம்மாநில வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உதவியை அளிக்கக் களம் இறங்கியுள்ளன. வாகன பராமரிப்பும் சேவையும் அசாம் மற்றும் பிஹார் மாநில வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.


1800 102 1155 என்ற இலவச டோல் ஃப்ரீ எண்ணுக்குத் தொடர்புகொண்டு அம்மாநிலத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இலவச வாகன சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 60 நாளில் 50ஆயிரம் பேர் முன்பதிவு... ஹூண்டாய் வென்யூவுக்கு குவியும் ஆதரவு!
First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...