Home /News /automobile /

உங்களிடம் ஹூண்டாய் கார் உள்ளதா.! 10 நாள் Smart Care Clinic திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் இங்கே 

உங்களிடம் ஹூண்டாய் கார் உள்ளதா.! 10 நாள் Smart Care Clinic திட்டத்தில் கிடைக்கும் பலன்கள் இங்கே 

ஹூண்டாய் கார்

ஹூண்டாய் கார்

ஹூண்டாய்  மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் Hyundai Smart Care Clinic என்ற 10 நாள் வாடிக்கையாளர் இணைப்பு திட்டத்தை (customer connect program) அறிமுகப்படுத்தி உள்ளது.  

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம் Hyundai Smart Care Clinic என்ற 10 நாள் வாடிக்கையாளர் இணைப்பு திட்டத்தை (customer connect program) அறிமுகப்படுத்தி உள்ளது. நாட்டில் 1360 வொர்க்ஷாப்களின் நெட்வொர்க்கை ஹூண்டாய் கொண்டுள்ளது மற்றும் தன் வாடிக்கையாளர் களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம், ஷீல்ட் ஆஃப் டிரஸ்ட் மற்றும் சாலையோர உதவித் திட்டம் போன்ற மலிவு மற்றும் மதிப்புமிக்க சலுகைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதனிடையே, 10 நாள் நாடு தழுவிய திட்டமான Smart Care Clinic குறிப்பிட்ட ஆண்டு இறுதி சலுகைகள் மற்றும் பலன்களுடன் குறிப்பிட்ட கால பராமரிப்பு அதாவது பீரியாடிக் மெயின்டனன்ஸ் , சுத்திகரிப்பு (சானிடைசேஷன்) , சாலையோர உதவி (ரோட் சைட் அசிஸ்டன்ஸ்) உள்ளிட்டவற்றை வழங்குகிறது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இந்த Hyundai Smart Care Clinic என்ற முன்முயற்சியை ஹூண்டாய் அறிமுகப்படுத்தி உள்ளதற்கான நோக்கம், வழக்கமான சேவையானது (regular servicing) காரை எவ்வாறு திறமையாக மற்றும் தூய்மை டிரைவ் செய்ய உதவுகிறது என்பதை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்துகிறது. இதனிடையே ஹூண்டாய் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 11- 20 ஆகிய தேதிகளுக்கு இடையில் தங்களுக்கு அருகிலுள்ள Hyundai ஒர்க்ஷாப்களுக்கு சென்று மெக்கானிக்கல் பார்ட்ஸ்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி, மெக்கானிக்கல் லேபரில் 20 சதவீதம் வரை தள்ளுபடி, சானிடைசேஷனுக்கு 20 சதவீதம் தள்ளுபடி மற்றும் ஒரு வருடத்திற்கு RSA (one-year RSA) போன்ற சலுகைகளை பெறலாம். இவை தவிர 1,000 அதிர்ஷ்ட வாடிக்கையாளர்களுக்கு அடுத்த சர்வீஸின் போது ஃப்ரீ என்ஜின் ஆயில் மற்றும் ஆயில் ஃபில்டர் உள்ளிட்ட சலுகைகளும் கிடைக்கும்.

ALSO READ |  2 அடுக்கு வீடு, தனி டிவி மற்றும் ஃப்ரிட்ஜூடன் சொகுசாக வாழும் கோல்டன் ரெட்ரீவர்!

இதனிடையே Hyundai Motor India-வின் சேல்ஸ், மார்க்கெட்டிங் & சர்வீஸ் டைரக்டர் தருண் கர்க் (Tarun Garg) கூறுகையில், இந்த 2021-ஆம் ஆண்டு எங்களது ஹூண்டாய் மோட்டார் இந்தியாவிற்கு ஒரு மைல்கல் ஆண்டாகும். ஏனெனில் நாங்கள் இந்தியாவில் 25 வது ஆண்டைக் கொண்டாடுகிறோம், மேலும் எங்கள் ஆலையில் இருந்து 10 மில்லியனாவது காரையும் வெளியிடுவோம்.

இந்த கொண்டாட்டத்தை விரிவுபடுத்தும் வகையிலேயே நாடு தழுவிய 'Hyundai Smart Care Clinic' திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்துளோம். இது எங்கள் அன்பு வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கும். எங்கள் பிராண்ட் எப்போதுமே வாடிக்கையாளர்களை மையமாக கொண்டது. எனவே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய அனுபவத்தை சிறப்பாக்கவே இந்த நடவடிக்கை என்றார்.

ALSO READ |  டிவிட்டர் இந்தியா 2021 – இந்த ஆண்டில் வைரலான டிவீட்கள் என்னென்ன?

இந்நிலையில் ஹூண்டாய் சர்வீஸ் சென்டர்கள் ஆன்லைன் சர்வீஸ் புக்கிங், வெஹிக்கிள் ஸ்டேட்டஸ் அப்டேட், வீடு/அலுவலகத்திலிருந்து ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்டவற்றையும் வழங்குகின்றன. தவிர வாடிக்கையாளர்கள் டச்-ஃப்ரீ சேவைகளின் பலனை பெறலாம். வாடிக்கையாளர்கள் Chatbot-ஐ பயன்படுத்தி புதிய வாகனங்களைப் பார்க்கவும், டெஸ்ட் டிரைவ்களை புக் செய்யவும் அல்லது தங்கள் வாகனங்களின் சர்வீஸை திட்டமிடவும் முடியும்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Automobile, Hyundai

அடுத்த செய்தி