காற்று மாசுபாட்டை குறைக்க உலக நாடுகளில் பல மாற்று எரிபொருளை முயற்சி செய்து வருகின்றன. அதில் முதல் கட்டமாக, பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. மேலும், ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கார்பன் உமிழ்வுகளைக் குறைக்கும் ஆய்வில் ஹைப்ரிட் வாகனங்கள் எவ்வளவு பயன் தரும் என்று ஹுண்டாய் நிறுவனம், சவூதி அரேபியாவில் ஒரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் நிறுவனத்துடன் கூட்டாக செயல்பட்டுவருகிறது.
ஹுண்டாய் மோட்டார் நிறுவனம், சவூதி அரேபியாவில் உள்ள பிரதானமான எண்ணெய் நிறுவனமான அராம்கோ மற்றும் கிங் அப்துல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, சுற்றுசூழல் மாசுபாட்டைக் குறைக்க அட்வான்ஸ்ட் ஈ-ஃபியூயல் உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.
அராம்கோ நிறுவனத்தின் மேம்பட்ட எரிபொருள் தொழில்நுட்பம் மற்றும் ஹுண்டாய் மோட்டார்சின் அல்ட்ரா-லீன் பர்ன் என்ஜின் தொழில்நுட்பத்துடன், KAUST பல்கலைக்கழம் உதவுயுடன் இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது.
எரிபொருள் பயன்பாட்டில் புதிய முறைகளைக் கண்டறிவது ஹுண்டாய் நிறுவனத்துக்கு புதிதல்ல. ஹுண்டாய் மோட்டர்ஸின் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இன்டெர்னல் கம்பஸ்ஷன் என்ஜினை (ICE), பேட்டரி வாகனங்களுக்கு மற்றும் ஃபியூயல் செல் வாகனங்களாகவும் மாற்றும் முயற்சியில் கார்ப்பம் உமிழ்வைக் குறைக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த அராம்கோ நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான, அஹ்மத் ஓ-அல் கொவைட்டர், ‘வழக்கமாக பயன்படுத்தும் எரிபொருளுக்குப் பதிலாக ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்களில், அதற்கேற்ற மின் எரிபொருளைப் பயன்படுத்தும்போது, கிரீன்ஹவுஸ் உமிழ்வைக் எந்த அளவுக்கு குறைக்க முடியும் என்பதே எங்களுடைய இந்த கூட்டு ஆய்வின் நோக்கமாகும்.
Also Read : Hydrogen Fuel Cell-களால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!
மேலும், விரைவில் அதிக எண்ணிக்கையில் ஹைப்ரிட் எலக்ட்ரிக்கல் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட இருப்பதால், தற்போது ஒரு உண்மையான சவால் முன்வந்துள்ளது. ஹைப்ரிட் வாகனங்களுக்கு ஏற்ற எரிபொருள் மற்றும் மிகச்சிறப்பான அமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாக உள்ளது" என்று கூறினார். சிமுலேஷன் மற்றும் என்ஜின் சோதனை வழியாக உமிழ்வைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹுண்டாய் மோட்டார் குழுவின் வைஸ் பிரெசிடென்ட் அலைன் ரபோசோ “கிரீன்ஹவுஸ் உமிழ்வுகளைக் குறைக்க, சுற்றுசூழலுக்கு உகந்த ICE தொழில்நுட்பம் ஏற்றதாக இருக்கும்” என்று கூறினார்.
Also Read : ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த நிசான் நிறுவனம்..
இது மட்டுமின்றி, ஏற்கனவே, கார்பன் நியூட்ராலிட்டி 2045 என்று, 2045 ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் தனது தயாரிப்புகளில் கார்பன் பயன்பாடு இருக்காது என்ற குறிக்கோளை வெளியிட்டுள்ளது. அதை செயல்படுத்தும் விதமாக, பசுமை எனர்ஜி, மாற்று எரிபொருள், உள்ளிட்ட மாசு ஏற்படுத்தாத போக்குவரத்து தீர்வுகளுக்கு முதலீடு செய்வது பற்றியும் உறுதியளித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Honda