நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்!!

Web Desk | news18
Updated: July 23, 2019, 3:15 PM IST
நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் எலக்ட்ரிக் கார்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்கிறார்!!
எலக்ட்ரிக் கார்
Web Desk | news18
Updated: July 23, 2019, 3:15 PM IST
சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சென்னையில் தயாரிக்கப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல் எலக்ட்ரிக் காரை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேட்டரி  கார் உற்பத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

இந்த மாநாட்டில் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்ய இருந்த பேட்டரி கார்களும் இடம் பெற்று இருந்தது.


இந்த பேட்டரி காரில் தற்போது பயன்படுத்தும் கார்களை போன்று அனைத்து வசதிகளும் உள்ளன. சுமார் 7 மணி நேரம் வீட்டில் சார்ஜ் செய்தால் 600 கிலோ மீட்டர் வரை வாகனம் ஓடும் திறன் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த கார் நாளை காலை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த  எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் திட்டத்திற்காக ஹூண்டாய் நிறுவனம் 7,000 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading...

மேலும் படிக்க... சந்திரயான் 2 நிலவில் என்ன செய்யும்?

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 23, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...