ஹூண்டாய் கோனாவை கொடியசைத்துத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்..!

ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் கடந்த ஜூலை 9-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் கோனாவை கொடியசைத்துத் துவக்கி வைத்த தமிழக முதல்வர்..!
கோனா கார் அறிமுக விழா
  • News18
  • Last Updated: July 24, 2019, 12:47 PM IST
  • Share this:
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக காரான ஹூண்டாய் கோனாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

ஹூண்டாய் கோனா 25.30 லட்சம் ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவின் முதல் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை கோனா பெற்றுள்ளது. வடிவமைப்பில் முற்றிலும் ஹூண்டாய் க்ரெட்டாவின் தோற்றத்திலேயே கோனா உள்ளது. மெல்லிய எல்இடி லைட் உடன் ஹூண்டாவின் அடையாளமான க்ரில் பம்பர் முன்புற பானட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

கோனாவில் உள்புறத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பல தொழில்நுட்ப அப்டேட்கள் உடனான கோனாவில் 7 இன்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், ஸ்மார்ட்ஃபோன் கனெக்‌ஷன், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.


நேவிகேஷன் அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வாகனம் இயக்கும் போது மட்டுமே இயங்கும் ஏசி என எலெக்ட்ரிக் கார் மேம்படுத்தப்பட்டுள்ளது. 39.2 kWh லித்தியம் பேட்டரி கொண்ட கோனா, முழு சார்ஜ் ஏற 6 மணி நேரம் ஆகிறது. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 452 கி.மீ வரையில் பயணிக்க முடியும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கூடுதலாக வால் சார்ஜர் வேண்டுமென்றால் வழங்கப்படும்.

வால் சார்ஜர் விலை 70 ஆயிரம் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் ஆகும். ஏசி சார்ஜர் மூலம் 1 மணி நேரத்துக்கு சார்ஜ் ஏற்றி 50 கி.மீ வரையில் பயணிக்கலாம். 2.8 kW கொண்ட போர்டபிள் சார்ஜரும் கோனா உடன் கொடுக்கப்படுகிறது. சார்ஜிங் ஸ்டேஷன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடன் இணைந்து எலெக்ட்ரிக் சார்ஜிங் மையங்களை ஹூண்டாய் அறிமுகப்படுத்த உள்ளது.

முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது. கோனா இந்தியா 100 kW மோட்டார் உடன் வருகிறது. 131 bhp திறன் வெளியீடும் 395 Nm என்ற அளவில் டார்க் வெளியீடும் உள்ளது. நான்கு ட்ரைவிங் மோட் கொடுக்கப்பட்டுள்ளன. ஈகோ, ஈகோ ப்ளஸ், கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட். பெட்ரோல் கார்களைவிட கோனாவின் பராமரிப்புச் செலவு மிகவும் குறைவாகும்.

Loading...

அரசின் மானியம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பெருகும் ஆதரவு ஆகியவற்றின் காரணமாக கோனா அறிமுகமான பத்து நாட்களுக்குள்ளே 100-க்கும் அதிகமானோர் கோனாவை முன்பதிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக ஆண்டுக்கு 500 கார்களை சென்னையில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய ஹூண்டாய் முடிவெடுத்துள்ளது.

First published: July 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...