ஹூண்டாய் இந்தியா நிறுவனம் சமீபத்தில் 2023 க்ரெட்டா (Creta) மற்றும் அல்காசர் (Alcazar) எஸ்யூவி-க்களை அறிமுகப்படுத்தி உள்ளது. குறிப்பிடப்பட்ட SUV-க்களின் இந்த அப்டேட்டட் வெர்ஷன்கள் மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் மற்றும் குறைந்த டிரிம்களுக்கான கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளன.
2023 மாடல் Creta மற்றும் Alcazar கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த 2 அப்டேட்டட் கார்கள் டிரைவர், பேசேஞ்சர், சைட் மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் உட்பட மொத்தம் 6 ஏர்பேக்ஸ்களை கொண்டுள்ளன. இந்த SUV-க்கள் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), வெஹிகிள் ஸ்டேபிளிட்டி மேனேஜ்மென்ட் (VSM), ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக்ஸ், சீட்பெல்ட் ஹைட் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ISOFIX அம்சங்களை பெறுகின்றன. இது தவிர Creta-வின் அனைத்து வேரியன்ட்களும் இப்போது 60:40 ஸ்பிலிட் ரியர் சீட்களுடன் வருகின்றன.
MY’23 SUV ரேஞ்ச் அறிமுகம் குறித்து பேசி இருக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் சீஃப் ஆப்ரேட்டிங் ஆஃபிசர் தருண் கர்க், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு முன்மாதிரியான மொபிலிட்டி எக்ஸ்பீரியன்ஸை வழங்க, ஒரு வாடிக்கையாளரை மையமாக கொண்ட அமைப்பாக நாங்கள் எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறோம். அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடல் SUV-க்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பு, வசதி மற்றும் செயல்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய இன்னும் சூப்பரான பேக்கேஜ் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். மேலும் எங்கள் பவர்டிரெய்ன்களில் RDE compliant மற்றும் E20 ஃப்யூயல் ரெடி இருப்பதை உறுதி செய்துள்ளோம் என குறிப்பிட்டு உள்ளார். RDE விதிமுறைகள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும். E20 எரிபொருள் என்பது 20% எத்தனால் கலந்த எரிபொருளை குறிக்கிறது.
2023 மாடல் ஹூண்டாய் Creta மற்றும் Alcazar கார்கள் Idle Stop & Go (ISG) அம்சத்தை பெற்றுள்ளன. இந்த அம்சம் வாகனத்தை stop & go கண்டிஷனில் இயக்கும் போதும் எரிபொருள் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. அதாவது இந்த அம்சம் அதிக ட்ராஃபிக் நிறைந்த பகுதியில் வாகனத்தை இயக்கும் போது எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டரை (ISG) பயன்படுத்துகிறது.
Creta இப்போது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களில் கிடைக்கிறது. இந்த அப்டேட்ஸ்களுடன் Creta -வின் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.45,000 வரை அதிகரித்து உள்ளது. Creta -வை போலவே Alcazar காரும் ரியர் டிஸ்க் பிரேக்ஸ், VSM, ESC மற்றும் ISOFIX ஆங்கரேஜ்கள் போன்ற கூடுதல் அம்சங்களை பெற்றுள்ள நிலையில் இந்த கார் 2.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கிறது. ஹூண்டாய் நிறுவனம் அதன் Venue காரையும் சமீபத்தில் அப்டேட் செய்தது நினைவிருக்கலாம். இந்த காம்பாக்ட் எஸ்யூவி இப்போது க்ரெட்டாவை இயக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இதன் மோட்டார் இப்போது 113bhp மற்றும் 250Nm டார்க்கில் கூடுதலாக 14bhp ஆற்றலை வெளியிடுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Hyundai, Hyundai Creta