Home /News /automobile /

ஜூலை மாதத்தில் ஹூண்டாய் இந்தியா கார் விற்பனை அதிகரிப்பு... எவ்வளவு தெரியுமா.? இதோ முழு விபரம்!

ஜூலை மாதத்தில் ஹூண்டாய் இந்தியா கார் விற்பனை அதிகரிப்பு... எவ்வளவு தெரியுமா.? இதோ முழு விபரம்!

hyundai

hyundai

Hyundai India | இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் ஜூலை மாதத்தில் 63,851 கார்களை விற்பனை செய்து 6 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

தென்கொரியாவின் ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் இந்திய லிமிடெட் இயங்கிவருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையைக் கருதி, பல்வேறு மாடல்களில் கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக கொரோனா தொற்றின் தாக்கத்தினால் கார்களின் விற்பனை சரிவை சந்தித்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை படிப்படியாக எட்டியுள்ளது. இதற்கேற்றால் போல் மக்களும் விதவிதமான மாடல்களில் வரக்கூடிய கார்களை வாங்கும் இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜூலை மாதத்தில் 63,851 கார்களை விற்பனை செய்து 6 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றுள்ளது ஹூண்டாய் நிறுவனம். ஆனால் கடந்த ஆண்டு இதே ஜூலை மாதத்தில் 60, 249 கார்களை விற்பனை செய்த நிலையில், தற்போது உள்நாட்டு விற்பனை புள்ளி விபரங்கள் 50, 500 யூனிட்களாக அதிகரித்துள்ளது. மேலும் ஜூலை மாதத்தில் கணிசமாக எண்ணிக்கை அதிகரித்து 12,207 யூனிட்களில் இருந்து 9.4 சதவீதம் அதிகரித்து 13,351 யூனிட் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கார் பிராண்ட் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து ஹுண்டாய் மோட்டாரஸ் இந்தியா லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் இயக்குநர் தருண் கார்க் வெளியிட்ட அறிக்கையில், வாடிக்கையார்களின் தேவைக்கேற்றவாறு வாகனங்கள் உற்பத்தியாகிறது. விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைகிறது என தெரிவித்துள்ளார். தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹுண்டாய் SUV Tucson காருக்கும் வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கும் என நம்புவதாக தருண் கார்க் கூறியுள்ளார். ஹூண்டாய் நிறுவனம் அதன் ஏற்றுமதி எண்ணிக்கையை ஒவ்வொரு மாதத்திலும் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



 

இதோடு தென்கொரிய வாகன உற்பத்தியாளர்கள் கடந்த மே 2022ல் மொத்தம் 51, 263 யூனிட் கார்களை விற்ற நிலையில் இது முந்தைய ஆண்டை விட 67 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் ஹூண்டாய் மோட்டார் இந்திய லிமிடெட், தன்னுடைய உள்நாட்டு விற்பனையில் முந்தைய மாதங்களை விட 42, 293 கார்களை விற்றது. இது ஓராண்டிற்கு முன்னதாக இதே மாதத்தில் தக்கவைக்கப்பட்ட 25,001 யூனிட் கார்களில் இருந்து 69.2 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த மே மாதத்தில் 5,702 கார்களில் இருந்து 57.3 சதவீதம் அதிகரித்து 8,970 கார்களை விற்பனை செய்துள்ளதாக ஆட்டோமேக்கர் பிராண்ட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Also Read : ஸ்கார்பியோ எஸ்யூவி மீது ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி - அசத்தும் மஹிந்திரா.! 

குறிப்பாக சென்னையில் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் உற்பத்தி ஆலைகள் கடந்த மே 16,2022 முதல் மே 21, 2022 வரை பராமரிப்பு பணிகளின் காரணமாக மூடப்பட்டது. இருந்தப்போதும் ஏற்றுமதி மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனது பிராண்ட் உற்பத்தியை அதிகரித்தது. மேலும் சரியான நேரத்தில் உள்நாட்டு சந்தையில் டெலிவரியையும் செய்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Hyundai, India

அடுத்த செய்தி