ஹூண்டாய் ஐ20 காரின் விலை உயர்வு - புதிய விலை பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள்!

ஹூண்டாய் ஐ20 காரின் விலை உயர்வு - புதிய விலை பட்டியலை தெரிந்து கொள்ளுங்கள்!

ஹூண்டாய் எலைட் i20

LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், LEDடெயில் லைட்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், வயர்லெஸ் சார்ஜர், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் (hyundai third-gen i20) காரை கடந்த ஆண்டு நவம்பரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், LEDடெயில் லைட்கள், எலக்ட்ரிக் சன்ரூஃப், புஷ் பட்டன் ஸ்டார்ட் / ஸ்டாப், வயர்லெஸ் சார்ஜர், 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், போஸ் பிரீமியம் 7 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா தனது third-gen i20 கார் மாடல்களின் விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிய ஐ20 காரின் விலை ரூ .1,000 முதல் ரூ.13,000 வரை அதிகரித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம். கடந்த ஆண்டு 2020 நவம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக்கின் விலை தற்போது முதல் முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கார் மாடல்கள் அறிமுக விலை வரம்பான ரூ .6.80 லட்சம் முதல் ரூ .11.18 லட்சம் வரையிலான (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் கிடைத்தன.

தற்போது ஹூண்டாய் ஐ 20 துவக்க விலை ரூ .6.85 லட்சம் முதல் ரூ.11.19 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் ஐ 20 மூன்று எஞ்சின் விருப்பங்களுடன் சந்தையில் கிடைக்கிறது. 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் (83PS / 88PS மற்றும் 115Nm), 1.0-லிட்டர் கப்பா டர்போ-ஜிடி பெட்ரோல் (120PS மற்றும் 172Nm) மற்றும் 1.5 லிட்டர் U2 CRDi டீசல் (100PS மற்றும் 240Nm). 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு MT மற்றும் IVT ஆட்டோமேட்டிக் தேர்வுகள் உள்ளன.

1.0-லிட்டர் கப்பா டர்போ-ஜிடிஐ பெட்ரோல் மோட்டாரை 6-ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் மூலம் இணைக்க முடியும். இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் கார் 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேக்னா(Magna), ஸ்போர்ட்ஸ் (Sportz), அஸ்டா (Asta) மற்றும் அஸ்டா (O) -Asta(O) உள்ளிட்டவற்றின் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) புதிய விலை பட்டியலை கீழே காணலாம்.

Also read... இந்த வருடம் இந்தியாவில் அறிமுகமாகயுள்ள 7-சீட்டர் கார்கள் - விவரம் உள்ளே!

* ஹூண்டாய் ஐ20 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் (Hyundai i20 1.2-litre Kappa petrol:

கார் மாடல்: மேக்னா எம்டி, பழைய விலை: ரூ .6.80 லட்சம், புதிய விலை: ரூ .6.85 லட்சம்

கார் மாடல்: ஸ்போர்ட்ஸ் எம்டி, பழைய விலை: ரூ.7.60 லட்சம், புதிய விலை: ரூ .7.69 லட்சம்

கார் மாடல்: அஸ்டா எம்டி, பழைய விலை: ரூ .8.70 லட்சம், புதிய விலை: ரூ .8.80 லட்சம

கார் மாடல்: அஸ்டா (O), பழைய விலை: ரூ .9.20 லட்சம், புதிய விலை: ரூ 9.33 லட்சம்

கார் மாடல்: ஸ்போர்ட்ஸ் ஐவிடி, பழைய விலை: ரூ.8.60 லட்சம், புதிய விலை: ரூ 8.69 லட்சம்

கார் மாடல்: அஸ்டா ஐவிடி, பழைய விலை:ரூ .9.70 லட்சம், புதிய விலை: ரூ 9.80 லட்சம்

* ஹூண்டாய் ஐ 20 1.0 லிட்டர் கப்பா டர்போ-ஜிடி பெட்ரோல் (Hyundai i20 1.0-litre Kappa turbo-GDi petrol) :

கார் மாடல்: ஸ்போர்ட்ஸ் ஐஎம்டி, பழைய விலை: ரூ.8.80 லட்சம், புதிய விலை: ரூ.8.81 லட்சம்

கார் மாடல்: அஸ்டா ஐஎம்டி, பழைய விலை: ரூ.9.90 லட்சம், புதிய விலை: ரூ.9.91 லட்சம்

கார் மாடல்: அஸ்டா டி.சி.டி, பழைய விலை: ரூ.10.67 லட்சம், புதிய விலை: ரூ.10.68 லட்சம்

கார் மாடல்: அஸ்டா (O), பழைய விலை: ரூ.11.18 லட்சம், புதிய விலை: ரூ.11.19 லட்சம்

* ஹூண்டாய் ஐ 20 1.5 லிட்டர் யு 2 சிஆர்டி டீசல் (Hyundai i20 1.5-litre U2 CRDi diesel):

கார் மாடல்: மேக்னா எம்டி, பழைய விலை: ரூ.8.20 லட்சம், புதிய விலை: ரூ.8.21 லட்சம்

கார் மாடல்: ஸ்போர்ட்ஸ் எம்டி, பழைய விலை: ரூ.9 லட்சம், புதிய விலை: ரூ 9.01 லட்சம்

கார் மாடல்: அஸ்டா (O), பழைய விலை: ரூ.10.60 லட்சம், புதிய விலை: ரூ.10.61 லட்சம்

போலார் ஒயிட், டைபூன் சில்வர், ஸ்டாரி நைட், காப்பர் மெட்டாலிக், டைட்டன் கிரே மற்றும் ஃபியரி ரெட் ஆகிய ஆறு வெளிப்புற மோனோடோன் கலர்களில் இருந்து ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: