இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Hyundai i20 N Line வாகனம் - இதன் ஆரம்ப விலை தெரியுமா?

ஹூண்டாய்

உட்புற அமைப்பை பொறுத்தவரை, i20 N Line ஹேட்ச்பேக் ஒரு தனித்துவமான மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் வடிவமைப்பு, N Line லோகோவுடன் செக்கர்-ஃபிளாக் லெதர் இருக்கைகள், சிவப்பு சுற்றுப்புற வெளிச்சம், N லோகோ மற்றும் மெட்டல் பெடல்களுடன் துளையிடப்பட்ட லெதர்-போர்த்தப்பட்ட கியர் நாப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

  • Share this:
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் அதன்புதிய i20 N Line வாகனத்தை ₹9.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், N6 (iMT), N8 (iMT) மற்றும் N8 (DCT) ஆகிய மூன்று டிரிம்களில் இந்த ஸ்போர்ட்டி லுக்கில் தோற்றமளிக்கும் ஹேட்ச்பேக் கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் i20 N Line வாகனம், நிறுவனம் வெளியிடும் N வரிசை மாடல்களில் முதன்மையானது ஆகும். எதிர்காலத்தில் ஒரு ஸ்போர்ட் டிரைவ் அனுபவத்தைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தனித்துவமான பிரிவை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் அதன் வரிசையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாகனத்தின் முன்பதிவு கடந்த மாதம் தொடங்கியது. இதுதவிர இந்த வாகனத்தை ஹூண்டாய் டிஜிட்டல் சேனலில் அல்லது ஹூண்டாய் சிக்னேச்சர் டீலர்ஷிப்களில் டோக்கன் தொகையான ₹25,000 கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Hyundai i20 N Line வாகனத்தின் சிறப்பம்சங்கள்:

வெளிப்புற அமைப்பை பொறுத்தவரை, ஸ்போர்ட்டி லுக்கில் தோற்றமளிக்கும் ஹேட்ச்பேக் வாகனம், புதிய அலாய் டிசைன் மற்றும் ஆர் 16 டயமண்ட் கட் அலாய் வீல்களை N லோகோவுடன் பெற்றுள்ளது. முன்பக்கத்தில், இது ஒரு ஸ்போர்ட்டி டூ-டோன் பம்பர், செக்கர்ஸ் ஃபிளாக்-இன்ஸ்பையர்டு கிரில், அத்லெடிக் தோற்றமுடைய சிவப்பு முன் ஸ்கிட் பிளேட் மற்றும் கார்னிஷ்ங் ரெட் சைட் சில் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. முன்பக்க டிஸ்க் பிரேக்குகளில் சிவப்பு கால்லிப்பரும், முன் ஃபாக் லேம்பில் குரோம் கார்னிஷும் இடம்பெற்றுள்ளது.

பின்புறத்தில், இது டூயல் எக்ஸாஸ்ட், டார்க் குரோம் கனெக்ட்டிங் டெயில் லாம்ப் கார்னிஷ் மற்றும் ஸ்போர்ட்டி டெயில்கேட் ஸ்பாய்லர் ஆகியவற்றை பெறுகிறது. ஹூண்டாய் ஐ 20 என் லைன் 3,995 மிமீ நீளம், 1,775 மிமீ அகலம், 1,505 மிமீ உயரம் மற்றும் 2,580 மிமீ வீல்பேஸ் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் பரிமாணங்களின் அடிப்படையில் இது நிலையான ஐ 20 மாடல்களைப் போன்று இருக்கும்.

உட்புற அமைப்பை பொறுத்தவரை, i20 N Line ஹேட்ச்பேக் ஒரு தனித்துவமான மூன்று-ஸ்போக் ஸ்டீயரிங் வடிவமைப்பு, N Line லோகோவுடன் செக்கர்-ஃபிளாக் லெதர் இருக்கைகள், சிவப்பு சுற்றுப்புற வெளிச்சம், N லோகோ மற்றும் மெட்டல் பெடல்களுடன் துளையிடப்பட்ட லெதர்-போர்த்தப்பட்ட கியர் நாப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் 10.25 இன்ச் மெயின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் அனைத்து டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் உள்ளது.

Also read... 3 முறை விலை உயர்த்திய பிறகும் ஆகஸ்ட் மாதத்தில் 1.3 லட்சம் வாகனங்களை விற்ற மாருதி சுசுகி!

Hyundai i20 N Line வாகனத்தின் எஞ்சின், டிரான்ஸ்மிஷன், செயல்திறன் போன்றவற்றை பொறுத்தவரை, ஸ்போர்ட்டி செடான் 1.0 லிட்டர் டர்போ ஜிடிஐ பெட்ரோல் எஞ்சின் மூலம் 120 பிஎஸ் அதிகபட்ச சக்தியையும் 172 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த கார் 7-ஸ்பீட் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீட் ஐஎம்டி யூனிட்டுடன் வருகிறது.

I20 N Line வாகனத்தின் செயல்திறனை மேலும் த்ரில்லிங்காகவும், ஸ்போர்ட்டியாகவும் மாற்ற, ஹூண்டாய் 4 டிஸ்க் பிரேக்குகள், எக்ஸாஸ்ட் சவுண்ட் ட்யூனிங், சஸ்பென்ஷன் ட்யூனிங், அதிக சுறுசுறுப்பான டிரைவ் மற்றும் கையாளுதல், துடுப்பு ஷிஃப்டர்கள் மற்றும் ஸ்டீரிங் செட்அப் ஆகியவற்றை சேர்த்துள்ளது. இதுதவிர இந்த வாகனம் நான்கு மோனோடோன் கலர்களுடன், ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அவை தண்டர் ப்ளூ, ஃபெய்ரி ரெட், டைட்டன் க்ரே மற்றும் போலார் வைட் மற்றும் இரண்டு டூயல் டோன் கலர்களான - பாண்டம் பிளாக் ரூப் கொண்ட தண்டர் ப்ளூ மற்றும் பாண்டம் பிளாக் ரூப் கொண்ட ஃபெய்ரி ரெட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published: