ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ரூ.5.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்கும் ஹூண்டாயின் புதிய Grand i10 Nios - காரின் சிறப்பம்சங்கள்!

ரூ.5.69 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் துவங்கும் ஹூண்டாயின் புதிய Grand i10 Nios - காரின் சிறப்பம்சங்கள்!

ஹூண்டாய்

ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் புதிய கார் மாடலை அறிமுகம் செய்துள்ளனர். அந்த கார்களின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் 2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் (2023 Hyundai Grand i10 Nios) காரை வெளியிட்ட நிலையில், தற்போது இந்த காரின் விலைகளை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் தனது 2023 ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்திய சந்தையில் ரூ.5.68 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதிய Grand i10 Nios காருக்கான புக்கிங்ஸ்களை ஆரம்பத் தொகையான ரூ.11,000-க்கு ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இந்த புதிய காரில் எண்ணற்ற பு திய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பேஸ் 1.2 பெட்ரோல் Era MT-க்கான விலை வரம்பு ரூ.5.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் நிலையில், டாப் வேரியன்ட்டான 1.2 பெட்ரோல் ஆஸ்டா AMT-க்கான எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.47 லட்சத்தில் துவங்குகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் கார் புத்துணர்ச்சியூட்டும் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியரை கொண்டுள்ளது.

விலை விவரங்கள்:

1.2 பெட்ரோல் MT எக்ஸ்-ஷோரூம் விலைகள்:

Era - ரூ.5.69 லட்சம்

Magna - ரூ.6.61 லட்சம்

Sportz - ரூ.7.20 லட்சம்

Asta - ரூ.7.93 லட்சம்

1.2 பெட்ரோல் AMT எக்ஸ்-ஷோரூம் விலைகள்:

Magna - ரூ.7.23 லட்சம்

Sportz - ரூ 7.74 லட்சம்

Asta - ரூ.8.47 லட்சம்

1.2 பெட்ரோல் + CNG MT எக்ஸ்-ஷோரூம் விலைகள்:

Magna - ரூ.7.56 லட்சம்

Sportz - ரூ 8.11 லட்சம்

எக்ஸ்டீரியர் & இன்டீரியர்களின் சிறப்பம்சங்கள்:

இந்த ஃபேஸ்லிஃப்ட்டட் Grand i10 Nios இப்போது ஒரு புதிய ஃப்ரண்ட் பம்பரை கொண்டுள்ளது, இது பிளாக் என்லார்ஜ்டு கிரில்லைக் கொண்டுள்ளது. மேலும் புதிய ட்ரை-அரோ ஷேப்ட் LED DRL-க்கள் மற்றும் சைட் இன்டேக்ஸ்களால் சூழப்பட்டுள்ளது. புதிய 15-இன்ச் அலாய் வீல்ஸ்களுடன், ஹேட்ச்பேக்கில் லைட் பார் மூலம் இணைக்கப்பட்ட புதிய LED டெயில்-லைட்ஸ்களும் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட டெயில் லேம்ப் கிளஸ்டருடன் இந்த புதிய 15-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்ஸ்கள் வழங்கப்படுகின்றன.

காரின் உட்புறத்தில், ஹேட்ச்பேக்கின் கேபின் லேஅவுட் அப்படியே உள்ளது. ஆனால் புதிய மாடலில் சீட்ஸ்களுக்கு புதிய கிரே அப்ஹோல்ஸ்டரி, ரிவைஸ்டு இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஃபுட்வெல் லைட்டிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஹூண்டாய் இப்போது இந்த காரின் மூலம் போலார் ஒயிட், டைட்டன் கிரே, டைஃபூன் சில்வர், டீல் ப்ளூ மற்றும் ஃபியரி ரெட் ஆப்ஷன்களுடன் புதிய ஸ்பார்க் கிரீன் கலரை வழங்குகிறது. பரிமாண ரீதியாக இந்த புதிய Grand i10 NIOS கார் 3,815 மிமீ நீளம், 1,680 மிமீ அகலம் மற்றும் 1,520 மிமீ உயரம் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,450 மிமீ ஆகும்.

டூயல்-டோன் பீஜ் இன்டீரியர், லெதர்-வ்ரேப்டு ஸ்டியரிங் வீல், மெட்டல்-ஃபினிஷ் இன்சைட் டோர்கள் மற்றும் ஹேண்டில்ஸ் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. மற்ற முக்கிய உட்புற அம்சங்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், MID-யுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, வயர்லெஸ் சார்ஜர், டைப் சி சார்ஜர், ரியர் ஏசி வென்ட் கொண்ட FATC, 260 லிட்டர் பூட் ஸ்பேஸ் மற்றும் பல இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

Also Read : மணிக்கு 120 கிமீ டாப் ஸ்பீட்... 200 கிமீ மைலேஜ் தரும் DEVOT மோட்டார்ஸின் புதிய எலெக்ட்ரிக் பைக்!

எஞ்சின் விவரங்கள்:

ஹூண்டாயின் புதிய Grand i10 NIOS கார் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல், ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டியுடன் கூடிய 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் + சிஎன்ஜி உள்ளிட்ட மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில் புதிய 1.2-லிட்டர் என்ஏ கப்பா பெட்ரோல் எஞ்சின் 83PS ஆற்றலையும் 113 என்எம் பீக் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய கிராண்ட் i10 மாடலுக்கு 20.7 kmpl மற்றும் AMT-க்கு 20.1 kmpl திறன் இருப்பதாக ஹூண்டாய் நிறுவனம் கூறுகிறது. 1.2-லிட்டர் கப்பா பெட்ரோல்+ சிஎன்ஜி 69 PS பவர், 95என்எம் பீக் டார்க்கை உற்பத்தி செய்கிறது. CNG வேரியன்ட் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கும். மேலும் இது 27.3 kmpl மைலேஜை வழங்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்:

புதிய Hyundai Grand i10 NIOS ஃபேஸ்லிஃப்ட் கார் க்ரூஸ் கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ESC, ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் கன்ட்ரோல் (HAC) மற்றும் ISOFIX மவுண்ட்ஸ், வெஹிகிள் ஸ்டேபிளிட்டி மேனேஜ்மென்ட், டே & நைட் இன்சைட் ரியர்-வியூ மிரர், ரியர்-டிஃபாகர் உள்ளிட்ட பல புதிய பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. இந்த ஹேட்ச்பேக்கில் இப்போது 4 ஏர்பேக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் 6 ஏர்பேக்ஸ் டாப்-ஸ்பெக் வேரியன்ட்களில் பொருத்தப்பட்டுள்ளன.

First published:

Tags: Automobile, Cars, Hyundai