ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

ஐந்தரை லட்சத்திற்கு புத்தம் புது காரா?.. அசத்தும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல்

ஐந்தரை லட்சத்திற்கு புத்தம் புது காரா?.. அசத்தும் ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய மாடல்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

நடுத்தர வர்க்க மக்களின் கார் கனவை நனவாக்கும் நடவடிக்கையாக தனது புதிய ஐ10 காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்ப விலை ரூ.5.69 லட்சம் தான்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் தனது தயாரிப்புகள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. மேலும், ஹூண்டாய் தயாரிப்புகள் இந்தியாவில் தவிர்க்க முடியாத கார்களாக உருவாகியுள்ளது. தற்போது பட்ஜெட் வகை கார்கள் தயாரிப்பிலும் ஹூண்டாய் அதிரடியாக இறங்கியுள்ளது. அதன் முதல் படி தான் ரூ.5.69 லட்சத்திற்கு அசத்தலான அம்சங்களுடன் வெளியாகிருக்கும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் கார், தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளும் தொடங்கிவிட்டது. க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வாங்க விரும்பினால், 11 ஆயிரம் ரூபாயை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பலர் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வரும் நிலையில், தற்போது ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. குறைவான விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் லுக் மற்றும் வசதிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம். என்னென்ன வசதிகள் மற்றும் அப்டேட்கள் இருக்கின்றன என்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

பொதுவாக ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதற்கு ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் விதிவிலக்கு அல்ல. இந்த புதிய மாடலில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஃபுல் ஆட்டோமேட்டிக் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் ஆகிய வசதிகளையும், ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் பெற்றுள்ளது.

எஞ்சின் செயல்திறனை பொறுத்தவரையில், இந்தக் காரில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஹெச்பி திறனை வெளிப்படுத்தும். இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே ஹூண்டாய் நிறுவனம் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனையும் வழங்கியுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி மாடலில் பொருத்தப்பட்டிருப்பது, 1.2 லிட்டர் கப்பா இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஹெச்பி பவரையும், 95.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் சிஎன்ஜி மாடலில், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அசத்தலான பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 5.69 லட்ச ரூபாய் மட்டுமே. இதன் டாப் வேரியண்ட்டின் விலை 8.46 லட்ச ரூபாய் மட்டுமே. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

First published:

Tags: Automobile, Hyundai