விழாக் கொண்டாட்டத்துடன் இன்று வெளியானது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்!

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் கார் உள்ளது.

Web Desk | news18
Updated: August 20, 2019, 4:46 PM IST
விழாக் கொண்டாட்டத்துடன் இன்று வெளியானது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்!
ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ்
Web Desk | news18
Updated: August 20, 2019, 4:46 PM IST
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஹூண்டாய் நிறுவனம் தனது i10 சீரிஸில் புதிதாக க்ராண்ட் i10 நியோஸ் காரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாம் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமாக ஹூண்டாய் உள்ளது. புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட மெக்கானிஸம் மட்டுமல்லாமல் அதிக மைலேஜ் தரும் இந்தியாவின் நம்பர் 1 கார் என்ற பெயரைப் பெற்றுள்ளது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ். வெளியீட்டுக்கு முன்னரே பல சாதனைகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளதால் க்ராண்ட் i10 நியோஸ் காருக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் கார் உள்ளது. டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீ கிடைக்கிறது. மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜ் 26.2 kmpl என்ற ரீதியில் உள்ளது. இதேபோல், பெட்ரோல் ரக i10 நியோஸ் காரின் மேனுவல் ரகம் 20.7 kmpl என்ற ரீதியிலும் ஆட்டோமேட்டிக் ரகம் 20.5 kmpl என்ற ரீதியிலும் மைலேஜ் தருகிறது.


ஹூண்டாய் தனது i10 ரகத்தின் மூன்றாம் தலைமுறைக் காராக புதிய க்ராண்ட் i10 நியோஸ் காரை களம் இறக்குகிறது. முந்தைய i10 கார்களைவிட மாற்றி வடிவமைக்கப்பட்ட ஹெட்லைட், எல்இடி DRLs என அசத்துகிறது புதிய க்ராண்ட் i10 நியோஸ். சில்லவுட் வடிவமைப்பு வழக்கம்போல் ஹூண்டாய் தனித்துவத்துடன் ஹூண்டாய் வெர்னாவின் தோற்ற அமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் பார்க்க: 70 ஆண்டுகள் பழமையான கார் கண்காட்சி!
First published: August 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...