இன்றைய கால கட்டத்தில் எல்லோரின் வீடுகளிலும் கார் இருந்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப இவற்றின் உற்பத்தியின் அளவும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் சில குறிப்பிட்ட முதன்மையான பிராண்ட்களை அதிகம் விரும்பி வாங்குகின்றனர். அதில் ஒரு பிராண்ட் தான் ஹூண்டாய். இந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் புது புது மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸின் புதிய வகையை அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் அறிமுகப்படுத்துவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது. இந்த வேரியண்ட் ரூ.6,28,900 (எக்ஸ்-ஷோரூம்) என ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது கிராண்ட் ஐ10 நியோஸ் வரிசையில் அதிக ஹைடெக் வசதிகளை கொண்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார்ப்பரேட் எடிஷன் மேக்னா டிரிம் அடிப்படையிலானது. அதே போன்று 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வருகிறது. இது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இயங்குகிறது. எனவே சிறந்த மைலேஜ் அனுபவமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. AMT டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட வேரியண்ட்'இன் விலை ரூ.6,97,700 (எக்ஸ்-ஷோரூம்) விலையாக உள்ளது. இந்த புதிய வெர்ஷன் காரின் உட்புற மற்றும் வெளிப்புற அழகியல் அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் உள்ளது. இதில் இருக்கைகள் மற்றும் ஏசி வென்ட்களில் சிவப்பு செருகலுடன் அனைத்து கருப்பு உட்புறங்களையும் கொண்டுள்ளது.
இது தவிர, கார்ப்பரேட் எடிஷனில் புதிதாக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் வெளிப்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட 175/60 R15 கன் மெட்டல் ஸ்டைல்டு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ரூப் ரெயில்ஸ் தரப்பட்டுள்ளது. பின்புற குரோம் அழகுப்பாடு உள்ளது. அத்துடன் இதில் கார்ப்பரேட் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஓஆர்விஎம்' பகுதியானது கருப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. அதே போன்று மற்ற உடல் பாகங்களுக்கு பளபளப்பான கருப்பு ரேடியேட்டர் கிரில் நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Also Read : எலக்ட்ரிக் வாகனம் வாங்கினால் இந்தியாவில் வரி விலக்கு பெறலாம்
அடுத்தாக, இந்த காரின் உட்புறத்தில் 6.75-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மேலும் இதில் நேவிகேஷன் மூலம் ஸ்மார்ட்போன் மிரரிங் செய்யப்படுகிறது. எலக்ட்ரிக் ஃபோல்டிங் ஓஆர்விஎம், எல்இடி டர்ன் இன்டிகேட்டருடன் அவுட்சைட் மிரரில் நிலையான வடிவத்தை தந்துள்ளனர்.
விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் சேவை ஆகிய துறையை பார்த்து கொள்ளும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் இயக்குனர் தருண் கர்க் கூறுகையில், "தனித்துவமான மற்றும் புதுமையான அழகியல் மேம்பாடுகள் இந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் வந்துள்ளது. மேலும் இதில் அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன், கார்ப்பரேட் எடிஷன் ஸ்போர்ட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை ஈர்க்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இவற்றுடன் சிறந்த ஹேட்ச்பேக் வசதியும் உள்ளது." என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.