ஹூண்டாய் நிறுவனம் தனது டீசல் ரக க்ராண்ட் ஐ10 கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் க்ராண்ட் i10 வரிசையில் க்ராண்ட் i10 நியாஸ் காரை அறிமுகம் செய்தது. க்ராண்ட் i10 நியாஸ் உடன் க்ராண்ட் i10 காரும் விற்பனையில் இருக்கும் என்று அறிவித்த ஹூண்டாய் தற்போது க்ராண்ட் i10 காரில் டீசல் ரகத்தை மட்டும் நிறுத்தப்போவதாகக் கூறப்படுகிறது.
இனிவரும் காலங்களில் 83hp திறன் கொண்ட 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்ஜின் உடனான கார் மட்டுமே விற்பனைக்கு வரும் என்றும் அதிலிருந்து BS6 அப்க்ரேட் கிடைக்கும் என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. க்ராண்ட் i10 ஸ்போர்ட்ஸ் கார் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், LED DRL ஆகியவை சிறப்பம்சங்களாக உள்ளன.
கூடுதலாக, எலெக்ட்ரிக் ORVM, ரியர் ஏசி வென்ட், பார்க்கிங் சென்சார், பார்க்கிங் கேமிரா, இரு ஏர் பேக், EBD உடனான ஏபிஸ் என அசத்துகிறது க்ராண்ட் i10.
மேலும் பார்க்க: டீசல் ரக எர்டிகா காருக்கு ‘குட்பை’ சொன்ன மாருதி சுசூகி..! இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.