முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / ரூ.13.51 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிஷன்!

ரூ.13.51 லட்சத்திற்கு இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிஷன்!

ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிஷன்

ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிஷன்

Hyundai Creta Knight Edition | இந்த புதிய க்ரெட்டா நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு அற்புதமான எஸ்யூவி தேர்வை வழங்குகிறது.

  • Last Updated :

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) தனது பிரபலமான எஸ்யூவி க்ரெட்டாவின் புதிய மாறுபாட்டை ரூ.13.51 முதல் 18.18 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகப்படுத்தியுள்ளதாக நேற்று (மே. 3) தெரிவித்தது. அது ஹூண்டாய் க்ரெட்டா நைட் எடிஷன் ஆகும்.

இந்த புதிய க்ரெட்டா நைட் எடிஷனை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு அற்புதமான எஸ்யூவி தேர்வை வழங்குகிறது. மேலும் இந்த புதிய எடிஷன் அதன் பெயருக்கு ஏற்றபடி, மிகவும் 'போல்ட்' ஆன மற்றும் 'ஸ்போர்ட்டி' ஆன வடிவமைப்பு மேம்பாடுகளுடன் வருகிறது.

சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் (six-speed manual) மற்றும் ஆட்டோமேட்டிக் (ஐவிடி) டிரான்ஸ்மிஷன்களுடன் (automatic - IVT - transmissions) இணைக்கப்பட்ட பெட்ரோல் டிரிம்களை கொண்ட வேரியண்ட்கள் விலை முறையே ரூ.13.51 லட்சம் மற்றும் ரூ.17.22 லட்சம் என்கிற விலைக்கு அறிமுகமாகி உள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கூடிய டீசல் வேரியண்ட்கள் ரூ.14.47 லட்சம் மற்றும் ரூ.18.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன.

ALSO READ |  கேடிஎம் 2022 390 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன

“இந்தியாவில், எங்கள் நிறுவனத்தின் 25 ஆண்டுகால வளமான பாரம்பரியத்தின் ஒவ்வொரு தருணத்திலும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்வதே எங்களின் உறுதியான முயற்சியாகும். க்ரெட்டா மூலம், அல்டிமேட் எஸ்யூவி-ஐ எதிர்பார்க்கும் லட்சக்கணக்கான இந்திய எஸ்யூவி வாங்குபவர்களின் அபிலாஷைகளை ஹூண்டாய் அதிகரித்துள்ளது" என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் இயக்குநர் (விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் சேவை) ஆன தருண் கார்க் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

முன்னரே குறிப்பிட்டபடி, புதிய க்ரெட்டா நைட் ஆனது அழகியல் உடனான மேம்படுத்தல்களுடன் வருகிறது. அதாவது பல வெளிப்புற மற்றும் உட்புற டிசைன் எலிமெண்ட்ஸ் ஆனது பளபளப்பான கருப்பு வண்ண வடிவமைப்பையும் மற்றும் டெயில்கேட்டில் நைட் எடிஷன் லோகோவையும் பெற்றுள்ளது.

ALSO READ |  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள 5 எஸ்யூவி மாடல் கார்கள் இதோ!

மேலும் இந்நிறுவனம், ரூ.12.83 லட்சத்திற்கு வெளியாகி உள்ள க்ரெட்டா பெட்ரோல் எஸ் ட்ரிம்-இல் ஐஎம்டி (iMT - intelligent manual transmission) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த கார் உற்பத்தியாளர், 1.4 டர்போ ஜிடிஐ பெட்ரோல் எஞ்சினுக்கான புதிய எஸ்+ ட்ரிம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

க்ரெட்டாவின் இந்த புதிய எடிஷனில், ஸ்டாண்டர்ட் ஆன அம்சங்களாக டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

மேலும் தருண் கார்க், "2015 இல் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி-களில் ஒன்றாக இருப்பது மட்டுமின்றி க்ரெட்டா, இந்தியாவின் எஸ்யூவி பிரிவின் வளர்ச்சியின் முன்னணியிலும் உள்ளது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு ஒரு ஹவுஸ்ஹோல்ட் பெயராக மாறுகிறது. ஒவ்வொரு புதிய தயாரிப்பின் வெளியீட்டின் போதும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்த எல்லா முயற்சிகளையும் நாங்கள் செய்வோம்" என்றும் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

First published:

Tags: Hyundai