ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹூண்டாய் க்ரெட்டாவின் சிறப்பம்சங்கள்!

காட்சிப் படம்

கடந்த வருடம் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட முந்தைய ஜெனரேசன் கிரெட்டாவில் இருந்து மாறுபட்ட புதிய கிரெட்டா ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • Share this:
தென் கொரியா கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது. அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இவ்வகை கார்களுக்கு கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக சீனா மற்றும் இந்தியாவில் செகண்ட் ஜெனரேசன் க்ரெட்டா கார்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் சற்று திருத்தியமைக்கப்பட்ட க்ரெட்டா எஸ்யூவி-ஐ சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இடது கைப் பக்கம் கார் ஓட்டும் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இந்த கார்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் இந்தியாவில் விற்பனை நிறுத்தப்பட்ட முந்தைய ஜெனரேசன் கிரெட்டாவில் இருந்து மாறுபட்ட புதிய கிரெட்டா ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வெர்ஷன் ஃபேஸ்லிஃப்டட் (facelift)வெர்சனில் இருந்து மாறுபட்டது. ஃபேஸ்லிஃப்டட் வெர்சன் வருகிற 2022 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : சீனாவில் சொந்த சோலார் சார்ஜிங் ஸ்டேஷன் - டெஸ்லாவின் அடுத்த அதிரடி!

தற்போது ரஷ்யாவின் க்ரெட்டா ஸ்பெக் மாடலில் புதிய கிரில் மற்றும் டிரங்க் லிட் ஆனது, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 ரோ எஸ்யூவி தி அல்கசர் (3 Row the Alcazar)-ல் இருப்பது போல் அமைந்துள்ளது. இதில் ஹெக்ஸாகோனல் கிரில் போன்று இருந்தாலும் ஒரிஜினலில் இருப்பது போல் வளைவுகள் இதில் இல்லை. மேலும் முன்னால் இருக்கும் பம்பர் ஆனது பெரிய ஏர் டேம் கொண்டதாக அமைந்துள்ளது. முன்னால் இருக்கும் ஸ்கிட் பிளேட்டானது பார்வைக்கு குறைவாக தெரிகிற வகையில் அமைந்துள்ளது. மேலும் ஸ்க்ரீன் குளோ எல்இடி, ட்ரை- பீம் எல்இடி முகப்பு விளக்கு, ஃபாக் லேம்ப் ஆகியவை செகண்ட் ஜெனரேசன் கிரெட்டாவில் உள்ளது போன்று அமைந்துள்ளது.

Also read : இந்தியாவில் அறிமுகமாகியுள்ள 2021 Range Rover Velar கார்களில் அப்படி என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் தற்போதைய மாடல்களில் புரொஃபைல் சில்வரில் இருப்பது போல் அல்லாமல் கருப்பு நிறத்தில் அமைந்துள்ளது. இதில் உள்ள டூயல் டோன் கேபின் ஆனது பார்ப்பதற்கு கிளாஸி மற்றும் ரிச்சான அனுபவத்தைக் கொடுக்கும். இதில் உள்ள இன்ஃபடெயின்மென்ட் சிஸ்டமானது 10.25 இஞ்ச் டிஸ்பிளே, ஸ்பிலிட் ஸ்க்ரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. டி-கட் ஸ்டியரிங் வீல் லெதரால் கவர் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் உள்ள ஸ்மார்ட்போன் ஒயர்லெஸ் சார்ஜர், ப்ளூ லிங்க கார் கனெக்ட்டிவிட்டி சூட், 8 ஸ்பீக்கர் கொண்ட Bose ஆடியோ சிஸ்டம் ஆகியவை இதில் முக்கியமானது.

இந்த அப்டேட் செய்யப்பட்ட க்ரெட்டாவில் 1.6 லிட்டர் அல்லது 2.0 லிட்டர் என்ஜின் ஆப்சன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஸன் கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Tamilmalar Natarajan
First published: